
விநாயகர் சதுர்த்தி: பயணிகள் வசதிக்காக 261 சிறப்பு ரயில்கள்
விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக 261 சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் அறிவித்துள்ளது.
கரோனா மூன்றாவது அலை குறித்து மத்திய அரசு எச்சரித்துள்ள நிலையில், பயணிகள் அதிகம் கூடுவதைத் தவிர்க்கும் வகையில் கூடுதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
படிக்க | வேளாண் பல்கலை. முதுநிலை மாணவர் சேர்க்கை: நாளை முதல் விண்ணப்பம்
அதன்படி, மத்திய ரயில்வே துறையில் 201, மேற்கு ரயில்வே துறையில் 42, கொங்கன் வழித்தடத்தில் 18 சிறப்பு ரயில்களும் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் ரயில்கள் புறப்படும் நேரம், வழித்தடம் உள்ளிட்ட விவரங்களை www.enquiry.indianrail.gov.in-ல் அறியலாம் எனவும் கூறப்பட்டுள்ளது.