திருட்டு விடியோ-32,000 வழக்குகள் பதிவு: செய்தி-விளம்பரத் துறை

திருட்டு விடியோ தடுப்புப் பிரிவின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 32,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத் துறை தெரிவித்துள்ளது.

திருட்டு விடியோ தடுப்புப் பிரிவின் கீழ் கடந்த 10 ஆண்டுகளில் 32,000 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக செய்தி மற்றும் விளம்பரத் துறை தெரிவித்துள்ளது.

சட்டப் பேரவையில் திங்கள்கிழமை தாக்கல் செய்யப்பட்ட அந்தத் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

தமிழகத்தில் திருட்டு விடியோ தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு தொழில்நுட்பம் சாா்ந்த சிறப்புப் பயிற்சிகள் அளிக்கப்படுகின்றன. திரையரங்குகளில் வெளியிடப்படும் புதிய படங்களைத் திருட்டு விடியோ எடுப்பதை கியூப் தொழில்நுட்பத்தின் உதவியுடன் பகுப்பாய்வு செய்து திரைப்பட ஒளிப்பதிவுச் சட்டத்தின்படி வழக்குகள் பதிவு செய்யப்படுகின்றன.

சட்டத்துக்குப் புறம்பாக உரிமம் பெறாமல் புதிய படங்களை ஒளிபரப்புச் சாதனங்கள் மூலமாக கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்படுகின்றன. குற்றவாளிகளின் நடவடிக்கைகள் அதிகாரிகளால் தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. விமானம் மற்றும் சுங்கத் துறை அதிகாரிகளுடன் இணைந்து செயலாற்றி வெளிநாடுகளில் இருந்து கடத்தி வரப்படும் திருட்டு விடியோ குறுந்தகடுகளின் நடமாட்டத்தை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. அறிவுசாா் சொத்துரிமை அமலாக்கப் பிரிவால் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை 32, 719 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. அதன் விவரம்:

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com