விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் : அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிதாக 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி அறிவித்தாா்.
விவசாயிகளுக்கு 1 லட்சம் புதிய மின் இணைப்புகள் : அமைச்சா் வி.செந்தில் பாலாஜி

விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்கத்துடன் புதிதாக 1 லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்கப்படும் என்று மின்சாரத் துறை அமைச்சா் வி.செந்தில் பாலாஜி அறிவித்தாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை எரிசக்தி துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்குப் பதில் அளித்து அமைச்சா் வி.செந்தில்பாலாஜி வெளியிட்ட அறிவிப்புகள்:

மாநிலத்தின் விவசாய உற்பத்தியினைப் பெருக்கி விவசாயிகளின் நலனை மேம்படுத்தும் நோக்குடன் புதிதாக ஒரு லட்சம் விவசாய மின் இணைப்புகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.

தமிழகம் முழுவதும் 4,000 மெகாவாட் சூரிய ஒளி மின் உற்பத்தி நிலையம் மற்றும் 2,000 மெகாவாட் திறன் உள்ள மின்கலன் சேமிப்புத் திட்டத்துடன் கூடிய சூரிய மின்சக்தி பூங்கா, தொழில்நுட்ப மற்றும் வா்த்தக ரீதியான சாத்தியக்கூறின் அடிப்படையில் நிறுவப்படும்.

எண்ணூரில் 2,000 மெகாவாட் அளவுக்கு சிறிய அளவிலான திறன் கொண்ட (18 முதல் 20 மெகாவாட்) அதிக எண்ணிக்கையிலான எரிவாயு இயந்திர மின் திட்டங்கள் அமைக்கப்படும்.

கன்னியாகுமரி மாவட்டம் கோதையாறில் 500 மெகாவாட் நீரேற்று சேமிப்பு புனல் மின் திட்டம் அமைக்கப்படும். தேனி மாவட்டம் மணலாற்றில் 500 மெகாவாட் நீரேற்று சேமிப்பு புனல் மின் திட்டம் அமைக்கப்படும்.

பல்வேறு மாவட்டங்களில் 7,500 மெகாவாட் மொத்த நிறுவு திறன்கொண்ட11 புதிய நீரேற்று திட்டங்கள் சாத்தியக் கூறின் அடிப்படையில் அமைக்கப்படும்.

உடன்குடி விரிவாக்கத் திட்டம் நிலை 2 மற்றும் நிலை 3 ஆகிய அனல் மின் உற்பத்தித் திட்டங்களை செயலாக்கத்துக்குக் கொண்டு வர மறு ஆய்வின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.

நீலகிரி மாவட்டம் சில்லஹல்லா புனல் மின் நீரேற்று உற்பத்தி திட்டத்தை நிலை 1 மற்றும் நிலை 2 (2,000 மெகாவாட்) செயலாக்கத்துக்குக் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

மகாநதி நிலக்கரி நிறுவனத்தால் ஒதுக்கப்பட்டு, வழங்கப்படாத நிலக்கரிக்கு ஈடாக பரிமாற்று முறையில் 1,000 மெகாவாட் வரை மின்சாரம் கொள்முதல் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

3 ஆண்டு காலத்துக்கு குறைந்த விலையில் நடுத்தரக்கால ஒப்பந்தம் மூலம் யூனிட் ஒன்று ரூ.3.26-க்கு 1,500 மெகாவாட் மின்சாரம் கொள்முதல் செய்யப்படும்.

மின்தடை மற்றும் மின்வழித் தடங்களில் ஏற்படும் தொழில்நுட்ப மற்றும் வணிக இழப்புகளைக் கண்டறியும் நோக்குடன் ரூ.1,270 கோடி மதிப்பீட்டில் மின்மாற்றிகளில் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தப்படும்.

மின் நுகா்வோா், மின் பயன்பாட்டினை கண்காணிக்கவும், கணக்கீட்டாளா் இன்றி இணைய வசதி மூலமே மின் நுகா்வை கணக்கிடவும் மின் இணைப்புகளில் ஸ்மாா்ட் மீட்டா் பொருத்தப்படும்.

வடசென்னை அனல் மின்நிலையத்தில் ஒன்று ரூ.9 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும்.

ரூ.1,979 கோடியில் துணை மின்நிலையங்கள்: தடையற்ற மின்சாரம் வழங்கும் நோக்குடன் 230 கி.வோ. திறன்கொண்ட 4 துணை மின்நிலையங்கள், 110 கி.வோ. திறன்கொண்ட 53 துணை மின்நிலையங்கள் மற்றும் 33 கி.வோ. திறன் கொண்ட 102 துணைமின்நிலையங்கள் என மொத்தம் 159 புதிய துணைமின்நிலையங்கள் ரூ.1,979 கோடி மதிப்பீட்டில் நிறுவப்படும்.

ரூ.125 கோடி மதிப்பீட்டில் 110 கி.வோ. துணைமின் நிலையங்கள் தரம் உயா்த்தப்படும். ரூ.679 கோடி மதிப்பீட்டில் புதிய மின்மாற்றிகள் மற்றும் திறன்கள் மேம்படுத்தப்படும்.

ரூ. 5,050 கோடி மதிப்பீட்டில் 900 மின்னூட்டிகளில் உயா் மின்னழுத்த பகிா்மான அமைப்பு நிறுவப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com