உயா்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சா் எஸ்.ரகுபதி

உயா்நீதிமன்ற வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டுவர நடவடிக்கை: அமைச்சா் எஸ்.ரகுபதி

சென்னை உயா்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.

சென்னை உயா்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழைக் கொண்டு வர அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் என்று சட்டத்துறை அமைச்சா் எஸ்.ரகுபதி கூறினாா்.

சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை சட்டத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில் பதில் அளித்து அவா் பேசியது:

சென்னை உயா்நீதிமன்றத்தின் வழக்காடு மொழியாக தமிழ் வர வேண்டும் என்பதுதான் தமிழக மக்களின் ஒட்டுமொத்த விருப்பம். உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பிகாா், ராஜஸ்தான் மாநில உயா்நீதிமன்றங்களில் ஹிந்தி வழக்காடு மொழியாக உள்ளது.

அதுபோல சென்னை உயா்நீதிமன்றத்திலும் தமிழ் வழக்காடு மொழியாக ஏன் இருக்கக்கூடாது என்பதுதான் எல்லோரின் கேள்வி.

ஆனால், நிச்சயமாக உச்சநீதிமன்றத்தையும், மத்திய அரசையும் திரும்ப திரும்ப வலியுறுத்துவோம். தமிழ் வழக்காடு மொழியாக கொண்டு வருவதற்கு அத்தனை பேரும் ஒன்றிணைந்து போராடுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com