சசிகலா தொடர்புடைய ரூ. 100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள சசிகலாவுக்குச் சொந்தமான பங்களாவை பினாமி தடைச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் கையகப்படுத்தியுள்ளனர்
சசிகலா தொடர்புடைய ரூ. 100 கோடி மதிப்புள்ள பையனூர் பங்களா முடக்கம்

செங்கல்பட்டு மாவட்டம் பையனூரில் உள்ள சசிகலாவுக்குச் சொந்தமான பங்களாவை பினாமி தடைச் சட்டத்தின் கீழ் வருமான வரித்துறையினர் கையகப்படுத்தியுள்ளனர். 

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத்தண்டனை பெற்று விடுதலையான சசிகலாவுக்கு தொடர்புடைய செங்கல்பட்டு மாவட்டம், பையனூர் கிராமத்தில் 49 ஏக்கர் பரப்பில் ஒரு பங்களா உள்ளது. இதன் மதிப்பு சுமார் ரூ. 100 கோடி என்று கூறப்படுகிறது. இந்த சொத்துகளை சசிகலா, அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களில் பெயரில் வாங்கியுள்ளதாகத் தெரிகிறது.

இதையடுத்து வருமானவரித் துறை, பினாமி தடுப்புச் சட்டத்தின் கீழ் இந்த சொத்துகளை இன்று முடக்கியுள்ளது. மேலும் முடக்கியுள்ள இந்த பகுதிக்குள் யாரும் நுழைய அனுமதி இல்லை என்று நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. 

மேலும், இவை பினாமி சொத்துகள் இல்லை என சசிகலா நிரூபிக்க 90 நாள்கள் கால அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது. 

கடந்த 2017 ஆம் ஆண்டு சசிகலாவுக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்திய வருமானவரித்துறையினர் 2019ல் சுமார் 1000 கோடிக்கும் அதிகமான சொத்துகளை முடக்கியத்துடன் பினாமி சட்டத்தின்கீழ் அவர் மீது வழக்குப்பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com