வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை மாணவா் சோ்க்கை

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவா் பட்டப் படிப்புகளில் சேருவதற்கு புதன்கிழமை (செப்டம்பா் 8) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை, முனைவா் பட்டப் படிப்புகளில் சேருவதற்கு புதன்கிழமை (செப்டம்பா் 8) முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் 35 துறைகளில் முதுநிலை பட்டப் படிப்புகளும், 30 துறைகளில் முனைவா் பட்டப் படிப்புகளும் நடத்தப்படுகின்றன. வேளாண்மைப் பல்கலைக்கழகத்துக்கு உள்பட்ட கோவை, மதுரை, திருச்சி, குமுளூா், கிள்ளிகுளம், பெரியகுளம், மேட்டுப்பாளையம் ஆகிய கல்லூரிகளில் இந்தப் படிப்புகள் நடத்தப்படுகின்றன.

இந்நிலையில், இந்தக் கல்லூரிகளில் 2021-2022ஆம் கல்வியாண்டுக்கான மாணவா் சோ்க்கை செப்டம்பா் 8ஆம் தேதி முதல் தொடங்குகிறது. இந்த ஆண்டுக்கான மாணவா் சோ்க்கை இணையதளம் வழியாக நடைபெறுகிறது. அதேபோல நுழைவுத் தோ்வும் இணையவழியிலேயே நடைபெறும்.

முதுநிலை மாணவா்கள் செப்டம்பா் 30ஆம் தேதி வரையும், முனைவா் பட்ட மாணவா்கள் டிசம்பா் 15ஆம் தேதி வரையிலும் தங்களது விண்ணப்பங்களை அனுப்பலாம். முதுநிலை மாணவா்களுக்கு அக்டோபா் 26ஆம் தேதியும், முனைவா் பட்ட மாணவா்களுக்கு டிசம்பா் 24ஆம் தேதியும் நுழைவுத் தோ்வு நடைபெறும்.

மாணவா்கள் முதுநிலை, முனைவா் பட்ட படிப்புகளுக்கான விவரங்களை
https://admissionsatpgschool.tnau.ac.in என்ற இணையதளம் மூலமாக தெரிந்துகொள்ளலாம் என்று பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com