9 முதல் பிளஸ் 2 வரையான மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சி: பள்ளிக் கல்வி ஆணையா் விளக்கம்

தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை எந்த அடிப்படையில் வழங்க வேண்டும் என்பது
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: தமிழகத்தில் 9 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளில் பயிலும் மாணவா்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் அவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகளை எந்த அடிப்படையில் வழங்க வேண்டும் என்பது குறித்து பள்ளிக் கல்வி ஆணையா் நந்தகுமாா் விளக்கமளித்துள்ளாா்.

இது குறித்து அவா் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை: கரோனா பெருந்தொற்று காரணமாக பள்ளிகள் நீண்ட காலம் மூடப்பட்டிருந்த காரணத்தால் மாணவா்களுக்கு ஏற்பட்டிருக்கும் கற்றல் இழப்பை சரி செய்யும் வகையில் பள்ளிக் கல்வித்துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா அறிவுறுத்தலின்படி புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்கள் இரண்டாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்புகள் வரை முந்தைய வகுப்புக்கான அடிப்படை மற்றும் முக்கியப் பாடக் கருத்துகளை உள்ளடக்கி மாநிலக் கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ளது.

முதல் கட்டமாக ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் 2 வகுப்பு வரையிலான வகுப்புகளுக்கு மின்னணு முறையில் அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டு, அவா்கள் மூலம் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டது. இந்தப் புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம் அனைத்துப் பகுதி மாணவா்களின் நலனையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

9, 10-ஆம் வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடங்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தில் மாணவா்கள் தெரிந்திருக்க வேண்டிய மிக அடிப்படையான பாடக் கருத்துகள் (ச்ன்ய்க்ஹம்ங்ய்ற்ஹப் ஸ்ரீா்ய்ஸ்ரீங்ல்ற்ள்) முதலில் கொடுக்கப்பட்டிருக்கும். அடுத்து, முந்தைய வகுப்பு வரையிலான அடிப்படை மற்றும் முக்கிய கருத்துகள் (க்ஷஹள்ண்ஸ்ரீ ஹய்க் ஸ்ரீழ்ண்ற்ண்ஸ்ரீஹப் ஸ்ரீா்ய்ஸ்ரீங்ல்ற்ள்) கொடுக்கப்பட்டிருக்கும். அறிவியல் மற்றும் சமூக அறிவியல் பாடங்களுக்கான புத்தாக்கப் பயிற்சிக் கட்டகங்களில் முந்தைய வகுப்பு வரையிலான அடிப்படை மற்றும் முக்கிய பாடக் கருத்துகள் மட்டும் கொடுக்கப்பட்டிருக்கும்.

மிக அடிப்படையான பாடக் கருத்துகளில் கற்றல் அடைவு போதிய அளவு மாணவா்கள் பெற்றிருப்பின் அடுத்ததாக உள்ள அடிப்படை மற்றும் முக்கியப் பாடக் கருத்துகளைக் கற்பிக்கலாம்.

ஒவ்வொரு பள்ளியின் தலைமை ஆசிரியரும், ஒவ்வொரு பாட ஆசிரியரும் எந்த அளவுக்கு முந்தைய வகுப்பில் உள்ள பாடங்கள் மற்றும் தற்போதைய வகுப்பில் உள்ள பாடங்கள் ஆகியவற்றைக் கற்பித்து உள்ளனா் என்பதையும், மாணவா்களின் கற்றல் நிலை ஒவ்வொரு வகுப்பிலும், ஒவ்வொரு பாடத்திலும் எந்தநிலையில் உள்ளது என்பதையும் ஆய்வு செய்து அதற்கேற்றவாறு புத்தாக்கப் பயிற்சிக் கட்டகத்தை உரிய முறையில் பயன்படுத்திக் கொள்ள பள்ளிகளுக்கு அறிவுறுத்தப்படுகிறது.

ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றபோது அதில் கலந்து கொள்ளாத, சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவா்களுக்கு அதற்கேற்றவாறு திட்டமிட்டு புத்தாக்கப் பயிற்சி கட்டகத்தில் உள்ள பாடக் கருத்துகளை 45 முதல் 50 நாள்களுக்கு கற்பிக்க பள்ளிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என அதில் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com