மருதாநதி அணையிலிருந்து செப்.12ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

பாசனத்திற்காக மருதாநதி அணையிலிருந்து செப்டம்பர் 12ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க பொதுபணித்துறை உத்தரவிட்டுள்ளது.  
மருதாநதி அணையிலிருந்து செப்.12ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க உத்தரவு

பாசனத்திற்காக மருதாநதி அணையிலிருந்து செப்டம்பர் 12ஆம் தேதி முதல் தண்ணீர் திறக்க பொதுபணித்துறை உத்தரவிட்டுள்ளது. 
இதுகுறித்து பொதுபணித்துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில், திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டம், அய்யம்பாளையம் கிராமம், மருதாநதி அணையிலிருந்து 120 நாட்களுக்கு 12.09.2021-லிருந்து முதல் 30 நாட்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு 70 கன அடியும், பழைய ஆயக்கட்டிற்கு நாள் ஒன்றுக்கு 20 கன அடியும் ஆக மொத்தம் நாளொன்றிற்கு 90 கன அடிக்கு மிகாமலும் மற்றும் மீதமுள்ள 90 நாட்களுக்கு பழைய ஆயக்கட்டிற்கு மட்டும் நாள் ஒன்றுக்கு 20 கன அடிக்கு மிகாமலும் தண்ணீர் திறந்து விட அரசு ஆணையிட்டுள்ளது. 
இதனால் திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் வட்டத்தில் 6583 ஏக்கர் நிலங்கள் பயன் பெறும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com