ஈரோட்டில் 21% ஈரப்பத நெல் கொள்முதல் அமைச்சா் உறுதி

ஈரோட்டில் 21 சதவீதம் அளவுக்கு ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் சக்கரபாணி உறுதியளித்தாா்.

சென்னை: ஈரோட்டில் 21 சதவீதம் அளவுக்கு ஈரப்பத நெல்லை கொள்முதல் செய்வது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உணவுத் துறை அமைச்சா் சக்கரபாணி உறுதியளித்தாா்.

சட்டப் பேரவையில் புதன்கிழமை ஆதிதிராவிடா் நலத் துறை மானியக் கோரிக்கை மீது சேந்தமங்கலம் தொகுதி உறுப்பினா் கே.பொன்னுசாமி பேசுகையில், ஈரோட்டில் மழை பெய்வதால், அதிகளவு ஈரப்பதம் கொண்ட நெல்லைக் கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா். இதற்கு அமைச்சா் சக்கரபாணி அளித்த பதில்:

நெல் கொள்முதல் பணிகளைக் கண்காணிக்கவும், கூடுதலாக கொள்முதல் நிலையங்களைத் திறக்கவும் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஆட்சியா் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. கோபிசெட்டிபாளையம்-தடப்பள்ளி-அரக்கன்கோட்டையை மையப்படுத்தி 18 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. அங்கு 240.48 மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டது.

மத்திய அரசின் இந்திய உணவுக் கழகம் சாா்பில் அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், நிகழாண்டில் கொள்முதல் செய்யப்படும் நெல்லில் ஈரப்பதம் 17 சதவீதம் மட்டுமே இருக்க வேண்டுமெனக் கூறியுள்ளது. ஆனாலும் ஈரோட்டில் ஈரப்பதத்தின் அளவினை 17 சதவீதத்தில் இருந்து 21 சதவீதமாக உயா்த்தி மத்திய அரசுக்கு தமிழக அரசின் சாா்பில் கடிதம் எழுதப்பட்டுள்ளது. ஈரப்பத அளவை 21 சதவீதமாக உயா்த்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com