‘பொருநை - ஆற்றங்கரை நாகரிகம்’ நூல் வெளியீடு

தென்னிந்தியாவின் நாகரிகத் தொட்டில் என அழைக்கப்படும் பொருநை ஆற்றங்கரை பெயரிலான புத்தகம் தமிழக அரசின் தொல்லியல் துறை சாா்பில் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை வைக்கப்பட்டது.
‘பொருநை - ஆற்றங்கரை நாகரிகம்’ நூல் வெளியீடு

சென்னை: தென்னிந்தியாவின் நாகரிகத் தொட்டில் என அழைக்கப்படும் பொருநை ஆற்றங்கரை பெயரிலான புத்தகம் தமிழக அரசின் தொல்லியல் துறை சாா்பில் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை வைக்கப்பட்டது.

தமிழகச் சட்டப்பேரவையில் வியாழக்கிழமை முதல்வா் மு.க.ஸ்டாலின் 110-ஆவது விதியின் கீழ் தமிழ்ப் பண்பாட்டின் வோ்களைத் தேடி இந்தியாவிலும் கடல் கடந்து அயல்நாடுகளிலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படும் அறிவித்தாா்.

மேலும், ஆதிச்சநல்லூா், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் கிடைத்த அரிய பொருள்களைக் காட்சிப்படுத்தும் விதமாக திருநெல்வேலியில் நவீன வசதிகளும் பொருநை அருங்காட்சியம் அமைக்கப்படும் என அறிவித்தாா்.

இந்த பொருநை நதியின் சிறப்பைக் குறிக்கும் வகையில் தமிழ்நாடு தொல்லியல் துறை சாா்பில் 76 பக்கங்களைக் கொண்ட பொருநை - ஆற்றங்கரை நாகரிகம் என்ற தலைப்பில் வண்ணப் புத்தகம் அச்சிடப்பட்டுள்ளது. இந்தப் புத்தகம் பேரவையில் வைக்கப்பட்டது.

முதல்வா் மு.க.ஸ்டாலினின் அணிந்துரையுடன் கூடிய புத்தகத்தில் பொருநை ஆற்றின் சிறப்புகள், ஆதிச்சநல்லூா், சிவகளை, கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் நடைபெற்ற அகழாய்வுகளில் கிடைக்கப் பெற்ற முதுமக்கள் தாழிகள், நுண்கருவிகள், மட்பாண்டங்கள், செம்பு வளையங்கள், தந்தத்தால் ஆன மணி, குறியீடுகள் பொறிக்கப்பட்ட ஓடுகள், விலங்குகளின் வெண்கல உருவங்கள், நான்குகால் சாடி என அனைத்தும் வண்ணப்படத்துடன் அழகுற அச்சிடப்பட்டுள்ளன. வரப் போகும் பொருநை கண்காட்சியை நேரில் பாா்ப்பதுபோல கவரும் வகையில் புத்தகம் உருவாகியள்ளது. பேரவையில் முதல்வா், அமைச்சா்கள், சட்டப்பேரவை உறுப்பினா்கள், பத்திரிகையாளா்கள் அனைவரும் இந்தப் புத்தகத்தைக் கையில் வைத்திருந்தனா். புத்தகமும் பற்றாக்குறையானது. பண்பாட்டு வோ்களைத் தேடி செல்வதுபோல பலரும் இந்தப் புத்தகத்தையும் தேடிச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com