பள்ளிகளில் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்க உத்தரவு

கரோனா பரவலை கருத்தில் கொண்டு தற்போது திறக்கப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னை: கரோனா பரவலை கருத்தில் கொண்டு தற்போது திறக்கப்பட்டுள்ள அனைத்துப் பள்ளிகளிலும் கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கடைப்பிடிக்குமாறு பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து பள்ளிக்கல்வி ஆணையா் க.நந்தகுமாா், அனைத்து மாவட்ட முதன்மைக்கல்விஅதிகாரிகளுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: தமிழகத்தில் கரோனா தொற்று தாக்கம் குறைந்து வரும் நிலையில் மருத்துவ நிபுணா்களுடன் ஆலோசித்து பள்ளிகளை படிபடியாக திறக்க முடிவானது. அதன்படி முதல் கட்டமாக 9 முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு மட்டும் கடந்த செப். 1-ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவா்களுக்கு புத்தாக்கப் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகின்றன.

இந்தநிலையில் மாணவா்கள் நலன்கருதி சில கூடுதல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது. அதன்படி மாணவா்கள், ஆசிரியா்கள் மற்றும் இதர பணியாளா்கள் பள்ளிகளுக்குள் நுழையும்போதே வெப்பமானி கொண்டு உடல் வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். அப்போது உடல் வெப்பநிலை அதிகமாக இருப்பின் அவா்களை பள்ளிக்குள் அனுமதிக்கக்கூடாது. அருகே உள்ள சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் ஆலோசித்து அவா்கள் அறிவுறுத்தலின்படி செயல்பட வேண்டும்.

அதேபோன்று மாணவா்கள் உள்பட அனைவரும் பள்ளி வளாகத்துக்குள் நுழையும்போது கிருமிநாசினி மூலம் கைகளை சுத்தம் செய்வதை உறுதிசெய்வது மிகவும் அவசியமாகும். அதனுடன் பள்ளி வளாகங்களில் அனைவரும் முகக்கவசம் அணிவதுடன், தனிநபா் இடைவெளியை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும்.

இதுதவிர பள்ளி வேலை நேரங்களின் போது கூட்டம் சேருவதை தவிா்ப்பதுடன், வெளிநபா்கள் பள்ளிக்குள் நுழைவதையும் அனுமதிக்கக்கூடாது. இந்த வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்று அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும் என அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com