நாமக்கலில் மூன்று ஆண்டுகளில் காணாமல்போன 301 செல்லிடப்பேசிகள் மீட்பு: எஸ்.பி. தகவல்

நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போன ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 301 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.
நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் மீட்கப்பட்ட செல்லிடப்பேசிகளைப் பார்வையிடும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர்.
நாமக்கல் ஆயுதப்படை மைதானத்தில் மீட்கப்பட்ட செல்லிடப்பேசிகளைப் பார்வையிடும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் காணாமல் போன ரூ. 60 லட்சம் மதிப்புள்ள 301 செல்லிடப்பேசிகள் மீட்கப்பட்டுள்ளன.

நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் செல்லிடப்பேசிகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர். மேலும் தவறிப்போன செல்லிடப்பேசிகள் தொடர்பாகவும் மாவட்டத்தில் உள்ள காவல் நிலையங்களில் புகார்கள் பதிவாகின.

அதனடிப்படையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு மொத்தம் 539 செல்லிடப் பேசிகள் மீட்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. இதில் 301 செல்லிடப் பேசிகள் மட்டும் மீட்கப்பட்டுள்ளன. நாமக்கல் ஆயுதப்படை வளாகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் செல்லிடப்பேசிகளை வியாழக்கிழமை நேரில் பார்வையிட்டார்.

பின்னர் அந்த செல்லிடப்பேசிகளைப் உரியவர்களிடம் ஒப்படைக்க சம்மந்தப்பட்ட காவல் ஆய்வாளர்களுக்கு அறிவுறுத்தினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com