விநாயகரை அருகிலிருந்து தரிசனம் செய்ய முடியாதது வேதனை:  பக்தர்கள் பேட்டி

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும் ஊர்வலம் செல்வதற்கும் அரசு தடை விதித்துள்ளது.
சேலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அருள்மிகு ராஜகணபதி கோவிலில் தங்ககவசம் சாத்தப்பட்டு விநாயகர் காட்சியளித்தார்.
சேலத்தில் விநாயகர் சதுர்த்தி விழாவை முன்னிட்டு அருள்மிகு ராஜகணபதி கோவிலில் தங்ககவசம் சாத்தப்பட்டு விநாயகர் காட்சியளித்தார்.

vinayagar chaturthi pooja

தமிழகம் முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா இன்று கொண்டாடப்படுகிறது. பொது இடங்களில் விநாயகர் சிலை வைத்து வழிபடவும் ஊர்வலம் செல்வதற்கும் அரசு தடை விதித்துள்ளது. அவரவர் வீட்டில் வைத்து வழிபட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து விநாயகர் திருக்கோவில்களிலும் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.

இதன் ஒரு பகுதியாக சேலத்தில் பிரசித்தி பெற்ற அருள்மிகு ராஜகணபதி கோவிலில் சிறப்பு அபிஷேகம் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது. பால்,பன்னீர்,இளநீர் உள்ளிட்ட 16  திரவியங்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.இதையடுத்து அருள்மிகு ராஜகணபதி ராஜகணபதி தங்கக்கவசம் சாட்டப்பட்டது.

பக்தர்களுக்கு தரிசனம் செய்ய அனுமதி அளிக்காததால் கோவிலுக்கு வெளியே நின்று  திரளான பொதுமக்கள் சாமி தரிசனம் செய்தனர். ஆண்டுதோறும் ராஜகணபதி திருக்கோவிலில் விநாயகரை அருகிலிருந்து தரிசனம் செய்து விடுவோம். ஆனால் இந்த ஆண்டு விநாயகரை தூரத்திலிருந்து தரிசனம் செய்வது வேதனை அளிப்பதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

கரோனா நோய் தொற்று காரணமாக கோயிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்காததால் வெள்ளிக்கிழமை சேலம் கடைவீதியில் உள்ள ராஜ கணபதி கோயில் வெளியே ராஜகணபதி வணங்கும் பக்தர்கள்.

இனிவரும் காலங்களில் மக்கள் நலமாக வாழ வேண்டும் என்று வேண்டுதல் வைத்ததாக பக்தர்கள் தெரிவித்தனர்.மேலும் அடுத்த ஆண்டு விநாயகர் சதுர்த்தி விழாவை சிறப்பாகக் கொண்டாடுவோம் என்ற நம்பிக்கை உள்ளதாகவும் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com