செப்.13இல் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு

நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)
மா.சுப்பிரமணியன் (கோப்புப் படம்)

நடைபெற்று வரும் தமிழக சட்டபேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக நாளை மறுநாள் தீர்மானம் நிறைவேற்றப்படும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

தமிழக சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாகவே நீட் தேர்வுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுத்திருந்த திமுக தேர்தல் வாக்குறுதியில் முதல் சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படும் எனத் தெரிவித்திருந்தது.

திமுக ஆட்சியமைத்திலிருந்து பல்வேறு அரசியல் தரப்பினரும் நீட் தேர்வு தொடர்பான திமுகவின் தேர்தல் வாக்குறுதி குறித்து கேள்வி எழுப்பி வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக சனிக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய மருத்துவத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், தமிழக அரசு விரும்பாத, முதல்வர் மனதுக்கு ஒப்புதல் இல்லாத நிலையிலேயே நீட் தேர்வு நடைபெறுகிறது எனத் தெரிவித்தார்.

மேலும் தமிழக சட்டப்பேரவையின் இறுதி நாளான செப்டம்பர் 13ஆம் தேதி நீட் தேர்வுக்கு எதிராக தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்படும். எனத் தெரிவித்துள்ளார்.

நாளை (செப்டம்பர் 12) நாடு முழுவதும் நீட் தேர்வு நடைபெற உள்ள நிலையில் தமிழ்நாடு அரசு நாளை மறுநாள் நீட் தேர்வுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற உள்ளது அரசியல் அரங்கில் பேசுபொருளாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com