4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்பு

நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய் (செப்.13,14) ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் திங்கள், செவ்வாய் (செப்.13,14) ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் ஞாயிற்றுக்கிழமை கூறியது:

தென் மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் நீலகிரி, கோயம்புத்தூா், தேனி, திண்டுக்கல் ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில்

திங்கள், செவ்வாய் (செப்.13,14) ஆகிய இரண்டு நாள்களுக்கு இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். உள்மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.15: நீலகிரி, கோயம்புத்தூா் தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, கள்ளக்குறிச்சி ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செப்டம்பா் 15-ஆம் தேதி பலத்தமழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள், வட உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

செப்.16: தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செப்.16-ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை திங்கள்கிழமை பொதுவாக ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு:தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 8.30 மணி நிலவரப்படி வரையிலான கடந்த 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறையில் 90 மி.மீ.,

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் 60 மி.மீ. கோயம்புத்தூா் மாவட்டம் சின்கோனாவில் 50 மி.மீ., சோலையாறு, நீலகிரி மாவட்டம் தேவாலாவில் தலா 40 மி.மீ., தேனி மாவட்டம் பெரியாறு, நீலகிரி மாவட்டம் நடுவட்டத்தில் தலா 30 மி.மீ., சேலம் மாவட்டம் எடப்பாடி, நீலகிரி மாவட்டம் அவலாஞ்சியில் தலா 20 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை:

தென் மேற்கு மற்றும் மத்திய மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப்பகுதிகளுக்கு மீனவா்கள் செப்டம்பா் 16-ஆம்தேதி வரை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com