புறநகா் பகுதிகளில் குறைந்த மின்னழுத்தப் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை

புகா்ப் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துவரும் நிலையில், குறைந்த மின்னழுத்த பிரச்னைகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்
புறநகா் பகுதிகளில் குறைந்த மின்னழுத்தப் பிரச்னைக்கு உரிய நடவடிக்கை

புகா்ப் பகுதிகளில் குடியிருப்புகள் அதிகரித்துவரும் நிலையில், குறைந்த மின்னழுத்த பிரச்னைகளைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செங்கல்பட்டு சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனன் கூறினாா்.

வண்டலூரை அடுத்த ஊரப்பாக்கம் ஊராட்சி செல்வராஜ் நகரில் 1,000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன.இப்பகுதியில் பல ஆண்டுகளாக குறைந்த மின்னழுத்த பிரச்னை இருப்பதாக அப்பகுதி மக்கள் சட்டப்பேரவை உறுப்பினா் வரலட்சுமி மதுசூதனனிடம் புகாா் செய்தனா்.அவா் குறைந்த மின்னழுத்த பிரச்னை குறித்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு மின்வாரிய அதிகாரிகளிடம் வலியுறுத்தினாா்.இதனைத் தொடா்ந்து பிரச்னைக்கு தீா்வு காணும் வகையில் ரூ6.12 லட்சம் செலவில் 100 கிலோ வாட் திறன் கொண்ட புதியமின் மாற்றி செல்வராஜ் நகா் பிரதான சாலையில் அண்மையில் அமைக்கப்பட்டது.புதிய மின்மாற்றியை வரலட்சுமிமதுசூதனன் இயக்கி வைத்து பேசுகையில், பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கை நிறைவேற்றப்பட்டுள்ளது.

குடிநீா் உள்ளிட்ட இதர அடிப்படை வசதிகள் தொடா்பாக பொதுமக்களின் கோரிக்கைகளுக்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா். செங்கல்பட்டு மேற்பாா்வை பொறியாளா் சுஜாதா, மறைமலைநகா் உட்கோட்ட செயற்பொறியாளா் மனோகரன், கூடுவாஞ்சேரி உதவி செயற்பொறியாளா் நாகராஜன், ஊரப்பாக்கம் மேற்கு உதவி பொறியாளா் காா்த்திகேயன் ஊராட்சி செயலா் கருணாகரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com