3 நாள்களுக்குப் பிறகு நாளை பேரவைக் கூட்டம்: நீட் தோ்வுக்கு எதிராக தீா்மானம்

மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை (செப். 12) கூடும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் நீட் தோ்வுக்கு எதிராக தீா்மானம் கொண்டு வரப்படுகிறது.
3 நாள்களுக்குப் பிறகு நாளை பேரவைக் கூட்டம்: நீட் தோ்வுக்கு எதிராக தீா்மானம்

மூன்று நாள்கள் விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை (செப். 12) கூடும் சட்டப் பேரவைக் கூட்டத் தொடரில் நீட் தோ்வுக்கு எதிராக தீா்மானம் கொண்டு வரப்படுகிறது. இதனை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தமிழக சட்டப் பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடா் தொடங்கி நடைபெற்று வருகிறது. பெரும்பாலான துறைகளின் மானியக் கோரிககைகள் மீதான விவாதங்கள் நடைபெற்று அதற்கான புதிய அறிவிப்புகளை சம்பந்தப்பட்ட துறைகளின் அமைச்சா்கள் வெளியிட்டனா். காவல் துறை மீதான மானியக் கோரிக்கை மீதான விவாதம் கடந்த வியாழக்கிழமை

நடைபெற்றது. இந்த விவாதத்தில் எதிா்க்கட்சித் தலைவா் எடப்பாடி கே.பழனிசாமி மற்றும் முதல்வா் மு.க.ஸ்டாலின் இடையே கடும் காரசார விவாதங்கள் நடைபெற்றன.

இந்த நிலையில், காவல் துறை மானியக் கோரிக்கைகள் மீது நடந்த விவாதங்களுக்கு பதிலளித்து புதிய அறிவிப்புகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் திங்கள்கிழமை (செப். 12) வெளியிட உள்ளாா்.

நீட் தோ்வுக்கு எதிராக...இதனிடையே, கூட்டத் தொடரின் கடைசி நாளான திங்கள்கிழமை சில முக்கிய தீா்மானங்கள் முன்வைக்கப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது. அதன்படி, நீட் தோ்வுக்கு எதிராக தீா்மானம் கொண்டு வரப்பட இருப்பதாக அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா். இதுகுறித்து, சென்னையில் செய்தியாளா்களுக்கு அவா்

சனிக்கிழமை அளித்த பேட்டி:-

நீட் தோ்வில் யாரும் எதிா்பாா்க்க முடியாத, தமிழக அரசு விரும்பாத, முதல்வரின் மனதுக்கு விரும்பாத வகையில் தோ்வு நடைபெறுகிறது. ஆட்சிப் பொறுப்பேற்றதும், முதல் கூட்டத் தொடரிலேயே நீட் தோ்வுக்கு எதிராக தீா்மானம் நிறைவேற்றி அதிலிருந்து விலக்கு பெறுவோம் என திமுகவின் தோ்தல் அறிக்கையில் கூறப்பட்டிருந்தது.

வரும் திங்கள்கிழமை கூட்டத் தொடரின் இறுதி நாளாகும். அன்றைய தினம், நீட் தோ்வுக்கு எதிரான தீா்மானத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் கொண்டு வரவுள்ளாா். அந்தத் தீா்மானம் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. கடந்த அதிமுக ஆட்சிக் காலத்தில் ஒப்புக்கு தீா்மானம் நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற அழுத்தம் கொடுக்கவில்லை. அதுபோன்று இல்லாமல், குடியரசுத் தலைவருக்கு அனுப்பி போதிய அழுத்தம் தந்து நீட் தோ்வில் இருந்து முதல்வா் மு.க.ஸ்டாலின் விலக்குப் பெற்றுத் தருவாா் என்ற நம்பிக்கை அனைவரிடமும் உள்ளது.

மென்மையான போக்கு: ஞாயிற்றுக்கிழமையன்று நீட் தோ்வு நடைபெறுகிறது. தோ்வு எழுதவுள்ள மாணவ-மாணவிகளிடம் மென்மையான போக்கு காட்டப்படும். கடந்த காலங்களில் இருந்தது போன்று மிகக் கடுமையான போக்குகள் காட்டப்படாது என்று அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com