சேலம் மாவட்டத்தில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் தொடங்கியது!

சேலம் மாவட்டத்தில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.
சேலம் மணக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை கரோனா மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடுவதற்காக சமூக இடைவெளியுடன் காத்திருக்கும் பொதுமக்கள்.
சேலம் மணக்காடு அரசு மேல்நிலைப்பள்ளியில் ஞாயிற்றுக்கிழமை கரோனா மெகா தடுப்பூசி முகாமில் தடுப்பூசி போடுவதற்காக சமூக இடைவெளியுடன் காத்திருக்கும் பொதுமக்கள்.


 
சேலம்: சேலம் மாவட்டத்தில் கரோனா மெகா தடுப்பூசி முகாம் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணிக்குத் தொடங்கியது. பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி செலுத்தி கொண்டனர்.

சேலம் மாவட்டத்தில் கரோனா சிறப்பு மெகா தடுப்பூசி முகாம் நடத்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்து இருந்தது. இதற்காக 1235 வாக்குச்சாவடி மையங்களிலும், 107 அரசு ஆரம்ப சுகாதார நிலையங்கள் மற்றும் 12 அரசு மருத்துவமனைகள், சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவமனை, இ.எஸ்.ஐ. மருத்துவமனை என 1356  இடங்களில் தடுப்பூசி மையம் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

சேலம் மாநகராட்சி பகுதியில் மட்டும் 200 சிறப்பு மையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

கரோனா தடுப்பூசி போட ஞாயிற்றுக்கிழமை அதிகாலையிலேயே மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், சுகாதாரத்துறை ஊழியர்கள் அந்தந்த மையங்களுக்கு வந்தனர். சரியாக ஏழு மணிக்கு தடுப்பூசி போட தொடங்கினர்.

சேலம் அஸ்தம்பட்டி மணக்காடு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள மையத்திற்கு திரளான முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் ஆர்வத்துடன் வந்து தடுப்பூசி போட்டு சென்றனர்.

இந்த மையங்களுக்கு சேலம் மாநகராட்சி ஆணையாளர் தா.கிறிஸ்துராஜ் நேரில் சென்று பார்வையிட்டார்.

பொது மக்கள் கட்டாயம் அனைவரும் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என சேலத்தில் அனைத்து பகுதிகளிலும் பிரசாரம் செய்யப்பட்டு வருகிறது.

சேலம் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை ஒரு நாள் மட்டும் சுமார் 2 லட்சம் தடுப்பூசி போட மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com