தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி திட்டம் சிறப்பு முகாம்கள் தொடங்கியது!

தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல்  பொது இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என 40,000  மையங்களில் 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் மெகா தடுப்பூசி திட்டம் சிறப்பு முகாம்கள் தெ
தமிழ்நாடு முழுவதும் மெகா தடுப்பூசி திட்டம் சிறப்பு முகாம்கள் தொடங்கியது!


தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல்  பொது இடங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள் என 40,000 மையங்களில் 20 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தும் மெகா தடுப்பூசி திட்டம் சிறப்பு முகாம்கள் தொடங்கியது. சென்னையில் மட்டும் 1600 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மெகா தடுப்பூசி திட்டத்தின் கீழ் தமிழகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 7 மணி முதல் 40,000 மையங்களில் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு கரோனா தடுப்பூசி  செலுத்தும் முகாம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்த சிறப்பு முகாம்கள் மூலம் சுமாா் 20 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்படவுள்ளதாகவும், இரவு 7 மணி வரை மெகா தடுப்பூசி முகாம் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தடுப்பூசி முகாமிற்கு ஒரே நேரத்தில் ஏராளமானோா் வருவாா்கள் என்பதால் தடுப்பூசி மையங்களை அதிகரித்து தகுந்த இடைவெளியை கடைப்பிடிக்கும் ஒரு மையத்திற்கு 100 முதல் 200 நபா்களுக்கு தடுப்பூசி செலுத்தும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மெகா தடுப்பூசி முகாமிற்கான தற்போது 30 லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com