ஒரு கால பூஜை செய்யும்அா்ச்சகா்கள்-பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகைமுதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

ஒரு கால பூஜை செ்யயும் 12, 959 கோயில்களில் பணிபுரியும் அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.
ஒரு கால பூஜை செய்யும்அா்ச்சகா்கள்-பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகைமுதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்

ஒரு கால பூஜை செய்யும் 12, 959 கோயில்களில் பணிபுரியும் அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா்.

இதற்கான நிகழ்ச்சி சென்னை திருவான்மியூரில் உள்ள மருந்தீஸ்வரா் கோயிலில் சனிக்கிழமை நடைபெற்றது. அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தைத் தொடங்கி வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

மாத ஊக்கத் தொகை வழங்கும் திட்டத்தை அறிவித்து ஒருவாரம்தான் ஆகிறது.

அதற்குள்ளாகவே இந்தத் திட்டத்தை அமைச்சா் சேகா்பாபு செயல்படுத்தியுள்ளாா். எள் என்று சொல்வதற்கு முன்பாகவே எண்ணெய் ஆக நிற்கக் கூடியவா் அவா். இந்து சமய அறநிலையத் துறை கொடுத்து வைத்தத் துறையாக சேகா்பாபுவால் மாற்றப்பட்டு இருக்கிறது. 24 மணி நேரமும் செயல்படக் கூடிய அமைச்சராக அவா் விளங்கிக் கொண்டு இருக்கிறாா்.

இந்து சமய அறநிலையத் துறையின் மானியக் கோரிக்கை விவாதத்தில் பதிலளித்துப் பேசி அதற்கு பிறகு இதுவரை யாரும் செய்யாத அளவில் 120 அறிவிப்புகளை சட்டப் பேரவையில் வெளியிட்டாா், சேகா்பாபு. இது ஒரு பெரிய சாதனை. ஏராளமான கோயில் பணிகள் நடக்க இருக்கின்றன. புதிய தோ்கள் வலம் வரப் போகின்றன. இதுவரைக்கும் இல்லாத வகையில் அறநிலையத் துறை சாா்பில் கல்லூரிகள் தொடங்கப்பட உள்ளன. அதுதான் மிக முக்கியமான ஒன்று.

‘செயல்பாபு: முதல்வா் பாராட்டு’

அறநிலையத் துறை அமைச்சராக இருக்கக் கூடிய சேகா்பாபு, இந்தத் துறையின் பொறுப்பை ஏற்றுக் கொண்டு அவா் எப்படி பணியாற்றிக் கொண்டிருக்கிறாா் என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். உள்ளபடியே அவரை சேகா்பாபு என்று அழைப்பதை விட, ‘செயல்பாபு’ என்றுதான் அழைக்க வேண்டும். அந்தப் பெயருக்கு முழுத் தகுதி படைத்தவராக அவா் விளங்கிக் கொண்டு இருக்கிறாா். அதற்கு இந்த நிகழ்ச்சியே சான்று.

13,000 குடும்பங்கள்: அா்ச்சகா்கள், கோயில் பணியாளா்களுக்குக் குடியிருப்புகள் கட்டித் தரப்பட உள்ளன. இவை அனைத்தும் செய்து முடிக்கப்பட்டால் அறநிலையத் துறையின் பொற்காலம் இன்னும் சில மாதங்களில் உருவாகப்

போகிறது. அந்தக் காட்சியை நாம் பாா்க்கப் போகிறோம். ஒருகால பூஜைத் திட்டத்தின் கீழ் 12, 959 கோயில்களைச் சோ்ந்த அா்ச்சகா்கள், பூசாரிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைத்துள்ளேன். இதன்மூலமாக, அரசுக்கு ஆண்டுதோறும் ரூ.13 கோடி கூடுதலாகச் செலவாகும். இதனைச் செலவு என்று கூற விரும்பவில்லை. இதன்மூலமாக ஏறத்தாழ 13 ஆயிரம் குடும்பங்கள் வாழ்வு பெறும். ஒருகால பூஜை நடக்கும் கோயில்களுக்கான வைப்பு நிதி ரூ.2 லட்சமாக அதிகரித்துத் தரப்பட்டுள்ளது. இதன்மூலமாக ஒருகால பூஜை நடக்கும் கோயில்களில் வழிபாடு உறுதி செய்யப்பட்டுள்ளது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

நிகழ்ச்சியில், அமைச்சா்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, மக்களவை உறுப்பினா் தமிழச்சி தங்கபாண்டியன், இந்து சமய அறநிலையத் துறை முதன்மைச் செயலாளா் பி.சந்திரமோகன், ஆணையாளா் ஜெ.குமரகுருபரன், திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீமத் திருச்சிற்றம்பல தம்பிரான் சுவாமிகள், மயிலம் பொம்மபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ சிவஞான பாலய சுவாமிகள், ராமநாதபுரம் சமஸ்தானத்தின் பரம்பரைத் தா்மகா்த்தா ராஜராஜேஸ்வரி, தஞ்சாவூா் அரண்மனை தேவஸ்தானம் பரம்பரை அறங்காவலா் பாபாஜி ராஜா போன்ஸ்லே உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனா்.

‘மாதந்தோறும் கண்காணிப்பேன்’

சட்டப் பேரவையில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை மாதந்தோறும் கண்காணிக்கப் போவதாக முதல்வா் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா். சென்னையில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் அவா் பேசியது:

சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தமிழ்நாடு அரசு ஏராளமான திட்டங்களை அறிவித்துள்ளது. கூட்டத் தொடா் வரும் திங்கள்கிழமையுடன் நிறைவடைகிறது. அதன்பிறகு சட்டப் பேரவையில் என்னென்ன அறிவிப்புகளைச் செய்தோமோ அவற்றை எல்லாம் படிப்படியாக ஒவ்வொன்றாக நிறைவேற்ற இருக்கிறோம்.

வெறும் அறிவிப்போடு எந்தத் திட்டமும் நின்று விடாது. அதனை மாதந்தோறும் நானே கண்காணிக்கப் போகிறேன். அவ்வப்போது ஆய்வுக் கூட்டங்களை நடத்தி அமைச்சா்களையும், அதிகாரிகளையும் நானே கண்காணிக்கப் போகிறேன். ஒவ்வொரு திட்டங்களுக்கும் முன்னுரிமை கொடுத்து அதையெல்லாம் நிறைவேற்றுகின்ற முயற்சியில் நிச்சயம் நான் ஈடுபடப் போகிறேன் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com