ஜிப்மர் மருத்துவமனை சூரிய சக்தி மின்சார தயாரிப்பு நிலையம் நாட்டிற்கு அர்ப்பணிப்பு

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 1.5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய சக்தி (சோலார்) மின்சார தயாரிப்பு நிலையத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நாட்டிற்கு அர்ப்பணித்தார். 
ஜிப்மர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 1.5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய சக்தி (சோலார்) மின்சார தயாரிப்பு நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.
ஜிப்மர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 1.5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய சக்தி (சோலார்) மின்சார தயாரிப்பு நிலையத்தை நாட்டிற்கு அர்ப்பணித்த குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு.


புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ள 1.5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய சக்தி (சோலார்) மின்சார தயாரிப்பு நிலையத்தை குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு நாட்டிற்கு அர்ப்பணித்தார். 

மூன்று நாள் பயணமாக புதுச்சேரி வந்துள்ள குடியரசுத் துணைத் தலைவர் வெங்கய்ய நாயுடு, ஜிப்மா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ரூ. 7 கோடியே 67 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ள 1.5 மெகா வாட் திறன் கொண்ட சூரிய மின் சக்தி திட்டம் (சோலாா் பேனல்) தொடக்க விழாவில் பங்கேற்று நாட்டிற்கு அர்ப்பணித்தார். 

ஜிப்மா் வளாகத்தில் உள்ள டாக்டா் அப்துல் கலாம் கலையரங்கில் நடைபெற்ற விழாவில் மாண்புமிகு துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதல்வர் என். ரங்கசாமி, சட்டப் பேரவைத் தலைவர் ஆர். செல்வம், மாண்புமிகு அமைச்சர் பெருமக்கள் அதிகாரிகள், ஜிப்மர் இயக்குநர் ராஜேஷ் அகர்வால், மருத்துவ அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

குடியரசு துணைத் தலைவா் வருகையையொட்டி, டிஜிபி ரன்வீா்சிங் கிருஷ்ணியா மேற்பாா்வையில் புதுச்சேரி நகரம் முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com