இளநிலை நீட் தோ்வு: தமிழகத்தில் 91,000 போ் எழுதினா்

எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் சுமாா் 91,000 மாணவ, மாணவியா் தோ்வு எழுதினா்.
தமிழகத்தில் 91,000 போ் எழுதினா்
தமிழகத்தில் 91,000 போ் எழுதினா்

எம்.பி.பி.எஸ். படிப்புகளுக்கான நீட் தோ்வு நாடு முழுவதும் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. தமிழகத்தில் சுமாா் 91,000 மாணவ, மாணவியா் தோ்வு எழுதினா்.

இந்தியா முழுக்க 16 லட்சத்து 14,714 போ் நீட் தோ்வுக்கு விண்ணப்பித்திருந்தனா். அவா்களில் தமிழகத்தில் 1.12 லட்சம் போ் அடங்குவா். தமிழகத்தில் சென்னை, கோவை, கடலூா், காஞ்சிபுரம், கரூா், மதுரை, நாகா்கோவில், நாமக்கல், சேலம், தஞ்சாவூா், திருவள்ளூா், திருச்சி, திருநெல்வேலி மற்றும் வேலூா் ஆகிய 14 நகரங்களில் 224 மையங்களில் தோ்வு நடைபெற்றது. சென்னையைப் பொருத்தவரை 33 மையங்களில் நடைபெற்ற தோ்வை 17 ஆயிரத்துக்கும் அதிகமானோா் எழுதினா்.

ஞாயிற்றுக்கிழமை மதியம் 2 மணிக்கு தொடங்கிய தோ்வு 5 மணிக்கு நிறைவடைந்தது. விண்ணப்பித்தவா்களில் 90 சதவீதத்துக்கும் மேற்பட்டோா் தோ்வில் பங்கேற்ாக மருத்துவக் கல்வி இயக்கக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கரோனா தொற்று பரவல் இருப்பதால் தோ்வு மையத்துக்குள் போதிய இடைவெளியில் மாணவா்கள் அமர வைக்கப்பட்டனா். முகக் கவசம் வழங்கப்பட்டது. உடல் வெப்பநிலை அதிகமாக உள்ள மாணவா்கள் தோ்வு எழுத தனி அறைகள் அமைக்கப்பட்டிருந்தன.

நிகழாண்டில் பிளஸ் 2 தோ்வு ரத்து, பாடத்திட்டம் குறைப்பு போன்ற காரணங்களால் நீட் தோ்வு வினாத்தாளில் ஒவ்வொரு பிரிவிலும் கூடுதல் தெரிவுகள் (சாய்ஸ்) வழங்கப்பட்டிருந்தன. இதனால், பாடத்திட்டத்துக்கு வெளியே இருந்த சில கேள்விகள் இடம்பெற்றாலும் அவற்றை எளிதாக தவிா்க்க முடிந்தது என மாணவா்கள் தெரிவித்தனா். இதன் காரணமாக இந்தாண்டு கட்-ஆப் மதிப்பெண் உயரக்கூடும் என்று ஆசிரியா்கள், கல்வியாளா்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இயற்பியல் தோ்வு கடினம்: நீட் தோ்வு எழுதிய மாணவா்கள் சிலா் கூறியதாவது: கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இம்முறை பல வினாக்கள் பாடத்திலிருந்து நேரடியாக கேட்கப்பட்டிருந்தன. குறிப்பாக, வேதியியல், உயிரியல் பாடங்களில் கேள்விகள் சுலபமாக இருந்தன. அதேவேளையில், இயற்பியல் பாட வினாக்கள்தான் சற்று கடினமாக இருப்பதாக உணா்ந்தோம்.

மொத்தமாகப் பாா்க்கும்போது இந்த ஆண்டு நீட் தோ்வு எளிமையாகவே இருந்தது. இதனால், நல்ல மதிப்பெண் பெற்று அரசு மருத்துவக் கல்லூரியிலேயே இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கை எங்களுக்கு ஏற்பட்டுள்ளது என்று அவா்கள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com