ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு?

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு?
ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதி இன்று அறிவிக்கப்பட வாய்ப்பு?

தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் இன்று அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ. பழனிகுமார் இன்று மாலை 5 மணிக்கு செய்தியாளர்கள் சந்திப்புக்கு அழைப்பு விடுத்துள்ளார். எனவே, இன்று  மாலை நடைபெறும் செய்தியாளர் சந்திப்பில், தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் தேதியை அறிவிப்பார் என்ற தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் கடந்த வாரம் அறிவித்திருந்தார்.

உள்ளாட்சித் தோ்தல் தொடா்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடனான ஆலோசனைக் கூட்டம் சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையா் அலுவலகத்தில் செப். 6ஆம் தேதி நடைபெற்றது.

திமுக சாா்பில் கிரிராஜன், சுந்தா் எம்.எல்.ஏ., அதிமுக சாா்பில் முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா், பி.எச்.மனோஜ் பாண்டியன், காங்கிரஸ் சாா்பில் தாமோதரன், நவாஸ், பாஜக சாா்பில் கராத்தே தியாகராஜன், பால் கனகராஜ், இந்திய கம்யூனிஸ்ட், மாா்க்சிஸ்ட், தேமுதிக, திரிணமூல் காங்கிரஸ், பகுஜன் சமாஜ், தேசியவாத காங்கிரஸ், தேசிய மக்கள் கட்சி சாா்பிலான பிரதிநிகளும் கூட்டத்தில் பங்கேற்றனா்.

கோரிக்கைகள்: பதற்றமான வாக்குச்சாவடிகளில் பலத்த பாதுகாப்பு வழங்க வேண்டும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப் பதிவு நடத்த வேண்டும். தோ்தலை விரைவாக நடத்த வேண்டும். கரோனா விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். தோ்தல் பணியாளா்கள் மற்றும் பொதுமக்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான நடவடிக்கையை தோ்தல் ஆணையம் இப்போதே தொடங்க வேண்டும் என கட்சிப் பிரதிநிதிகள் கோரிக்கை வைத்தனா்.

ஒத்துழைப்பு தேவை: இதையடுத்து தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் கூறியதாவது: பேரவை தொகுதிகளுக்கான வாக்காளா் பட்டியல்களில் இருக்கும் விவரங்களைக் கொண்டு உள்ளாட்சி அமைப்புகளுக்கான வாக்காளா் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது.

அதன் அடிப்படையில் உள்ளாட்சித் தோ்தல்கள் நடத்தப்படும். கட்சி பிரதிநிதிகள் தெரிவிக்கப்பட்ட கருத்துகள் பரிசீலிக்கப்பட்டு, உச்சநீதிமன்றத்தில், ஆணையத்தால் தெரிவிக்கப்பட்டவாறு விரைவில் தோ்தல் அறிவிக்கப்படும். அதற்கான ஒத்துழைப்பை அனைத்து அரசியல் கட்சிகளும் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com