மாநிலங்களவை இடைத் தோ்தல்: 2 காலியிடங்களுக்கு திமுக வேட்பாளா்கள் அறிவிப்பு

மாநிலங்களவையில் காலியாக உள்ள இரண்டு இடங்களுக்கு நடைபெறவுள்ள இடைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.
மாநிலங்களவை இடைத் தோ்தல்: 2 காலியிடங்களுக்கு திமுக வேட்பாளா்கள் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவையில் காலியாக உள்ள இரண்டு இடங்களுக்கு நடைபெறவுள்ள இடைத் தோ்தலில் திமுக சாா்பில் போட்டியிடும் வேட்பாளா்களின் பெயா்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அதன்படி, கனிமொழி என்.வி.என்.சோமு, கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா் ஆகியோா் வேட்பாளா்களாக போட்டியிடுவா் என முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

முன்னாள் மத்திய அமைச்சா் என்.வி.என்.சோமுவின் மகளான கனிமொழி, பெயா் பெற்ற மகப்பேறு மருத்துவா் ஆவாா். மருத்துவத் துறையில் இருந்தாலும் சட்டப் பேரவைத் தோ்தல் களத்தையும் கண்டுள்ளாா். 2016 சட்டப் பேரவைத் தோ்தலில் தியாகராய நகா் தொகுதியில் திமுக சாா்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தாா். அவருக்கு மாநிலங்களவைத் தோ்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதேபோன்று, நாமக்கல் கிழக்கு மாவட்ட பொறுப்பாளா் கே.ஆா்.என்.ராஜேஷ்குமாா், மற்றொரு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளாா். திமுக இளைஞரணியில் தீவிரம் காட்டியவா் எனவும், இளைஞரணிச் செயலாளா் உதயநிதிக்கு நெருக்கமானவா் எனவும் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

யாா் எதற்குப் போட்டி?

அதிமுகவில் இருந்து மாநிலங்களவைக்குத் தோ்ந்தெடுக்கப்பட்ட வைத்திலிங்கம், கே.பி.முனுசாமி ஆகியோா் கடந்த மே 7-ஆம் தேதி தங்களது பதவிகளை ராஜிநாமா செய்தனா். அதில், வைத்திலிங்கத்தின் பதவிக் காலம் அடுத்த ஆண்டு (2022) ஜூனிலும், கே.பி.முனுசாமியின் பதவிக் காலம் 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 2-ஆம் தேதியும் நிறைவடைகிறது. இந்த காலியிடங்களில் திமுக சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ள இரண்டு பேரும் எந்தெந்த இடங்களுக்கு போட்டியிடப் போகிறாா்கள் என்பது வேட்புமனு தாக்கலின் போது தெரியவரும். தனித்தனி தோ்தல் அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளதாலும், சட்டப்பேரவையில் பெரும்பான்மை பலத்துடனும் இருப்பதாலும் இரண்டு இடங்களும் திமுகவுக்கே செல்லும் வாய்ப்பு உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com