உள்ளாட்சித் தேர்தலில் தேமுதிக தனித்துப் போட்டி: விஜயகாந்த்

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் புதன்கிழமை அறிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த்
தேமுதிக தலைவர் விஜயகாந்த்


தமிழக உள்ளாட்சித் தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிடக் கழகம் தனித்துப் போட்டியிடவுள்ளதாக அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் புதன்கிழமை அறிவித்துள்ளார்.

இதுகுறித்து விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையில்,

“தமிழகத்தில் நடைபெற இருக்கும் 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் தேசிய முற்போக்கு திராவிட கழகம் தனித்து போட்டியிடுகிறது, போட்டியிட விரும்புகின்ற அனைத்து நிர்வாகிகளும், கழகத் தொண்டர்களும் ஊரக உள்ளாட்சி தேர்தல் விருப்ப மனுக்களை 16.09.2021, 17.09.2021 இரண்டு நாள்கள் காலை 10.00 மணியிலிருந்து அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவை பெற்று, பூர்த்தி செய்யப்பட்ட விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சி தேர்தலில் கழகத்தின் சார்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிர்வாகிகளாக இருப்பவர்களும், கழகத்தின் அடிப்படை உறுப்பினர்களாக இருப்பவர்களும் தகுதியானவர்கள்.

கட்டணத் தொகை:

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் - 4,000/-
ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் - 2,000/-”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com