1-8 வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு: செப். 30ல் முடிவு - அமைச்சர் தகவல்

1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 
அன்பில் மகேஷ் பொய்யாமொழி
அன்பில் மகேஷ் பொய்யாமொழி

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து செப்டம்பர் 30 ஆம் தேதி முடிவு செய்யப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 

தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது குறித்து சென்னை கோட்டூர்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார். 

அதன்பின்னர் செய்தியாளர்களிடம் பேசும்போது, தமிழகத்தில் 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகளைத் திறப்பது தொடர்பாக முதல்வரிடம் நாளை அறிக்கையை சமர்ப்பிக்க உள்ளோம். அறிக்கையை பரிசீலித்த பின்னர் முதல்வர் முடிவெடுத்து அறிவிப்பார் என்றார். 

இந்நிலையில் இன்று முதல்வரிடம் அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில், சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 

பள்ளிகளைத் திறப்பது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள் வேறுபட்ட கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். சிலர் 1 முதல் 5 ஆம் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் சிலர் 1 முதல் 8ஆம் வகுப்புகளை தொடங்கலாம் என்றும் கூறுகின்றனர். 6 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான வகுப்புகளைத் தொடங்க முதல்வருக்கு இன்று அறிக்கை அனுப்பப்பட உள்ளது.  

தமிழகத்தில் 1 முதல் 8 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி திறப்பு குறித்து இம்மாத இறுதியில் முடிவு செய்யப்படும். செப்டம்பர் 30 ஆம் தேதி ஊரடங்கு நீட்டிப்பு குறித்த ஆலோசனையில் முடிவெடுக்கப்படும். மருத்துவ நிபுணர்கள் அளிக்கும் ஆலோசனையின் அடிப்படையிலே முடிவு செய்யப்படும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com