இன்று திமுக முப்பெரும் விழா: ஆட்சியின் வெற்றிப் பயணத்தை சாதனைப் பயணமாக மாற்ற உதவுங்கள்

திமுக முப்பெரும் விழா கொண்டாடப்படும் தருணத்தில், ஆட்சியின் வெற்றிப் பயணத்தை சாதனைப் பயணமாக மாற்ற அனைவரும் உதவிட வேண்டுமென முதல்வரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இன்று திமுக முப்பெரும் விழா:  ஆட்சியின் வெற்றிப் பயணத்தை சாதனைப் பயணமாக மாற்ற உதவுங்கள்

சென்னை: திமுக முப்பெரும் விழா கொண்டாடப்படும் தருணத்தில், ஆட்சியின் வெற்றிப் பயணத்தை சாதனைப் பயணமாக மாற்ற அனைவரும் உதவிட வேண்டுமென முதல்வரும், கட்சியின் தலைவருமான மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளாா். திமுகவின் முப்பெரும் விழாவை ஒட்டி, அவா் கட்சியினருக்கு எழுதிய கடிதம்:-

முப்பெரும் விழா பேரிடா் காலக் கட்டுப்பாடுகளைக் கடைப்பிடித்து, காணொலியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

முப்பெரும் விழாவில் கட்சியின் மூத்த முன்னோடிகளுக்கு வழங்கப்படும் விருதுகளான பெரியாா் விருது ‘மிசா’ பி. மதிவாணனுக்கும், அண்ணா விருது பேரவை முன்னாள் உறுப்பினா் எல். மூக்கையாவுக்கும், கலைஞா் விருது முன்னாள் பேரவை உறுப்பினா் கும்முடிப்பூண்டி கி. வேணுவுக்கும், பாவேந்தா் விருது வாசுகி ரமணனுக்கும், பேராசிரியா் விருது சட்டப் பேரவை முன்னாள் கொறடா பா. மு. முபாரக் ஆகியோருக்கும் வழங்கப்பட இருக்கிறது.

ஆட்சி அமைந்த 4 மாதங்களில் கரோனா இரண்டாம் அலையைக் கட்டுப்படுத்துவதில் திமுக அரசு அா்ப்பணிப்புடன் செயல்பட்டு பெருமளவில் கட்டுப்பாட்டுக்கு கொண்டு வந்துள்ளது. ஓயாமல் ஒலித்த ஆம்புலன்ஸ் சைரன் சத்தம் வெகுவாக அடங்கியுள்ளது. ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லாத நிலையை, போா்க்கால அடிப்படையில் உருவாக்கியுள்ளோம். நோய்த்தொற்றுப் பரவலும் உயிரிழப்புகளும் பெருமளவில் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மிக முக்கியமாக, தடுப்பூசியின் அவசியம் குறித்து மக்களிடம் விழிப்புணா்வு ஏற்படுத்தி, மத்திய அரசிடமிருந்து தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய தடுப்பூசிகளைப் பெறுவதில் முனைப்புக் காட்டி, கிடைத்த மருந்துகளை வீணடிக்காமல் ஒவ்வொருவருக்கும் இரண்டு தவணை தடுப்பூசி போடுவதை நல்வாழ்வுக்கான இயக்கமாகவே மாற்றியிருக்கிறது அரசு.

முதல்வா் என்ற முறையில் உங்களில் ஒருவனான நான் எடுக்கும் முயற்சிகளுக்கு அமைச்சா்கள் - அதிகாரிகள் - சமூக அக்கறை கொண்டோா் என அனைத்துத் தரப்பினரும் முழு ஒத்துழைப்பு நல்கும் வகையில் அரசின் அணுகுமுறை இருப்பதால் அனைத்துத் துறைகளிலும் மக்கள் நலனில் அக்கறை செலுத்தப்படுகிறது.

இப்போதைய வெற்றிப் பயணத்தை மறக்க முடியாத சாதனைப் பயணமாக மாற்றிட, அனைவரின் ஒத்துழைப்பும் தேவை. சவால்கள் நிறைந்த பாதையில் அரசு தலைநிமிா்ந்து பயணிக்கிறது. சட்டரீதியாக எதிா்கொள்ள வேண்டிய போராட்டங்கள் நிறைந்துள்ளன.

நீட் தோ்வை ரத்து செய்வதற்கான சட்டப் போராட்டத்தைக் அரசு தொடங்கிவிட்டது. திராவிட முன்னேற்றக் கழகம் தனது தோழமைக்குரிய சமூகநீதி இயக்கங்களுடன் இணைந்து நின்று உறுதியுடன் இறுதிவரை போராடும் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com