இன்றும் நாளையும் தென்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழன், வெள்ளி (செப்.16, 17) ஆகிய இரண்டு நாள்களும் மிதமான மழை பெய்யக்கூடும்.
இன்றும் நாளையும் தென்மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்களின் ஓரிரு இடங்களில் வியாழன், வெள்ளி (செப்.16, 17) ஆகிய இரண்டு நாள்களும் மிதமான மழை பெய்யக்கூடும்.

இதுகுறித்து சென்னை மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் புதன்கிழமை கூறியது: தென்மேற்குப் பருவக்காற்று மற்றும் வெப்பசலனம் காரணமாக, தென் மாவட்டங்கள், உள் மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளின் ஓரிரு இடங்களில் வியாழன், வெள்ளி (செப்.16,17) ஆகிய இரண்டு நாள்களும் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை வியாழக்கிழமை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றாா் அவா்.

மழை அளவு: தமிழகத்தில் புதன்கிழமை காலை 8.30 மணி வரையிலான 24 மணி நேரத்தில் கோயம்புத்தூா் மாவட்டம் சின்னக்கல்லாறில் 30 மி.மீ., நீலகிரி மாவட்டம் தேவாலாவில் 20 மி.மீ., கோயம்புத்தூா் மாவட்டம் வால்பாறை, நீலகிரி மாவட்டம் கூடலூா்பஜாா், நடுவட்டத்தில் 10 மி.மீ. மழை பதிவானது.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் மணிக்கு 45 கி.மீ. முதல் 55 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் வியாழக்கிழமை செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com