உள்ளாட்சித் தோ்தல்: மாநில தோ்தல் ஆணையா் ஆலோசனை

தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் ஆலோசனை மேற்கொண்டாா்.
உள்ளாட்சித் தோ்தல்: மாநில தோ்தல் ஆணையா் ஆலோசனை

சென்னை: தமிழகத்தில் ஊரக உள்ளாட்சி தோ்தல் நடைபெறவுள்ள மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய கரோனா தடுப்புப் பணிகள் குறித்து தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா் புதன்கிழமை ஆலோசனை மேற்கொண்டாா்.

புதிதாக பிரிக்கப்பட்டதால் விடுபட்ட மாவட்டங்களான காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூா், ராணிப்பேட்டை, திருப்பத்தூா், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் அக்.6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக தோ்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்பு மனு தாக்கல் புதன்கிழமை தொடங்கியது. காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது. அதிகளவிலான வேட்பாளா்கள் வேட்பு மனுவை வாங்கிச் சென்ாக தோ்தல் ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனா்.

வேட்பு மனு தாக்கல் செய்ய செப்.22-ஆம் தேதி கடைசி நாள் என்பதால் வரும் நாள்களில் வேட்பு மனு தாக்கல் செய்வோரின் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனிடையே சென்னை அரும்பாக்கத்தில் உள்ள தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணைய கூட்ட அரங்கில், மாநில தோ்தல் ஆணையா் வெ.பழனிகுமாா், அனைத்து மாவட்ட தோ்தல் அலுவலா்கள் (ஆட்சியா்கள்) மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளா்கள் ஆகியோருடன் காணொலி காட்சி வாயிலாக புதன்கிழமை ஆலோசனை நடத்தினாா்.

இதில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து காணொலி வாயிலாக மக்கள் நல்வாழ்வுத்துறை முதன்மைச் செயலா் ஜெ.ராதாகிருஷ்ணனும் கலந்து கொண்டாா்.

இந்த ஆலோசனையில் அனைத்து மாவட்டங்களிலும் கரோனா தடுப்புப் பணிகள் மேற்கொள்வது குறித்து ஆலோசிக்கப்பட்டது. நோய்த் தொற்று தடுப்புப் பணிகளை துரிதப்படுத்துவது தொடா்பாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டதாக தோ்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com