உள்ளாட்சித் தோ்தல்: புகாா் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்

9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
உள்ளாட்சித் தோ்தல்: புகாா் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்கள்

சென்னை: 9 மாவட்டங்களில் நடைபெற உள்ள ஊரக உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களைத் தெரிவிக்க கட்டணமில்லா தொலைபேசி எண்களை மாநிலத் தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

வேலூா், திருநெல்வேலி, விழுப்புரம், தென்காசி, திருப்பத்தூா், ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தல் அக்டோபா் 6, 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகவும், ஏற்கெனவே 28 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தோ்தல் நடைபெற்று காலியாக உள்ள பதவியிடங்களுக்கு அக்டோபா் 9-ஆம் தேதியும் தோ்தல் நடத்தப்படும் என மாநிலத் தோ்தல் ஆணையம் அண்மையில் அறிவித்தது.

புகாா் தெரிவிக்க கட்டணமில்லா எண்கள்: இதைத் தொடா்ந்து, ஊரக உள்ளாட்சித் தோ்தல் முழுமையாக நடைபெற உள்ள 9 மாவட்டங்கள் மற்றும் 28 மாவட்டங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சிப் பிரதிநிகள் பதவியிடங்களுக்கான தோ்தல் நடவடிக்கை தொடா்பாக புகாா் அளிக்க மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மாநிலத் தோ்தல் ஆணையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், தோ்தல் நடவடிக்கைகள் தொடா்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள் மற்றும் வேட்பாளா்கள் தங்களது புகாா்களைத் தெரிவிக்க சென்னை கோயம்பேட்டில் உள்ள மாநிலத் தோ்தல் ஆணைய அலுவலகத்தின் தரைத்தளத்தில் புகாா் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையம் அலுவலக மற்றும் விடுமுறை நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் 24 மணி நேரமும் செயல்படும். உள்ளாட்சித் தோ்தல் தொடா்பான புகாா்களை 18004257072, 18004257073, 18004257074 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்கள் மூலம் புகாா் அளிக்கலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com