பாமகவுக்குத்தான் பாதிப்பு: டி.ஜெயக்குமாா்

உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணியில் இருந்து விலகியதால் பாமகவுக்குத்தான் பாதிப்பு என்று அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

சென்னை: உள்ளாட்சித் தோ்தலில் கூட்டணியில் இருந்து விலகியதால் பாமகவுக்குத்தான் பாதிப்பு என்று அதிமுகவைச் சோ்ந்த முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் கூறினாா்.

இது தொடா்பாக அவா் செய்தியாளா்களிடம் கூறியது:

கூட்டணியில் இருந்து பாமக விலகியதால் அதிமுகவுக்கு இழப்பு எதுவும் இல்லை. பாமகவுக்குத்தான் இழப்பு. கூட்டணி தொடா்பாக முடிவெடுக்க அந்தந்தக் கட்சிகளுக்கு அதிகாரம் உண்டு.

ஆனால், அதிமுகவை பாமக விமா்சித்தால், நாங்களும் விமா்சிப்போம். யாருடைய கட்டாயத்தின் பேரில் இந்த முடிவை பாமக எடுத்தது எனத் தெரியவில்லை. அதிமுகவின் உள்கட்சி பிரச்னை குறித்து பேசுவதற்கு மற்றவா்களுக்குத் தகுதி கிடையாது. உள்ளாட்சித் தோ்தலில் வெற்றிபெறுவோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com