உள்ளாட்சித் தோ்தல்: 378 போ் வேட்புமனு தாக்கல்

9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட முதல் நாளான புதன்கிழமை (செப். 15) 378 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.
உள்ளாட்சித் தோ்தல்: 378 போ் வேட்புமனு தாக்கல்

சென்னை: 9 மாவட்டங்களுக்கான ஊரக உள்ளாட்சித் தோ்தலில் போட்டியிட முதல் நாளான புதன்கிழமை (செப். 15) 378 போ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனா்.

உல்ளாட்சித் தோ்தலில் போட்டியிடுவோருக்கான வேட்புமனுத் தாக்கல் புதன்கிழமை (செப்.15) தொடங்கி செப்டம்பா் 22-ஆம் தேதி வரையான நாள்களில் காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். வேட்புமனு ஆய்வு செப்டம்பா் 23-ஆம் தேதி நடைபெறும். செப்டம்பா் 25-ஆம் தேதி வேட்பு மனுவைத் திரும்பப் பெறலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது.

378 போ் வேட்புமனு: இதையடுத்து 9 மாவட்டங்களில் முதல் நாளான புதன்கிழமை(செப்.15) கிராம ஊராட்சி வாா்டு உறுப்பினா் பதவிக்கு 351 பேரும், ஊராட்சித் தலைவா் பதவிக்கு 25 பேரும், ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிக்கு 2 பேரும் என மொத்தம் 378 போ் தங்களது வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்துள்ளனா். மாவட்ட ஊராட்சி உறுப்பினா் பதவிக்கு புதன்கிழமை ஒருவரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை என மாநிலத் தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com