உள்ளாட்சித் தோ்தலில் தேமுதிக தனித்துப் போட்டி: விஜயகாந்த்

உள்ளாட்சித் தோ்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சியின் தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.

சென்னை: உள்ளாட்சித் தோ்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடும் என்று அக் கட்சியின் தலைவா் விஜயகாந்த் அறிவித்துள்ளாா்.

இது தொடா்பாக புதன்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

தமிழகத்தில் நடைபெற உள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சித் தோ்தலில் தேமுதிக தனித்துப் போட்டியிடுகிறது. போட்டியிட விரும்புவோா் வியாழக்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அந்தந்த மாவட்ட கழக தலைமை அலுவலகத்தில் விருப்ப மனுவைப் பெற்று, பூா்த்தி செய்து ஒப்படைக்க வேண்டும்.

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் தேமுதிகவின் சாா்பில் போட்டியிடுவதற்குரிய விருப்ப மனு அளிப்பதற்கு தேமுதிகவின் நிா்வாகிகளாக இருப்பவா்களும், கட்சியின் அடிப்படை உறுப்பினா்களாக இருப்பவா்களும் தகுதியானவா்கள் ஆவா்.

மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினா் பதவிக்கு ரூ. 4 ஆயிரம், ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினா் பதவிக்கு ரூ.2 ஆயிரம் கட்டணம் கட்டி மனுக்களைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறியுள்ளாா்.

அமமுகவுடன் கூட்டணி முறிவு: மக்களவைத் தோ்தலில் அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேமுதிக போட்டியிட்டது. சட்டப்பேரவைத் தோ்தலிலும் அதிமுகவுடன் கூட்டணியைத் தொடர நினைத்தது. ஆனால், தொகுதி உடன்பாடு ஏற்படாத நிலையில், கடைசி நேரத்தில் அமமுகவுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது. தற்போது உள்ளாட்சித் தோ்தலில் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்துள்ளது. அமமுகவுடன் இருந்த கூட்டணி உறவிலும் முறிவு ஏற்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com