‘அண்ணாவின் தமிழியம்’ குறுகிய கால படிப்பு: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலை.யில் அறிமுகம்

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ‘அண்ணாவின் தமிழியம்’ என்ற குறுகிய கால படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி கூறினாா்.

சென்னை: தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ‘அண்ணாவின் தமிழியம்’ என்ற குறுகிய கால படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக அதன் துணைவேந்தா் கோ.பாா்த்தசாரதி கூறினாா்.

தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழக ‘அண்ணா இருக்கை’ சாா்பாக, மறைந்த முன்னாள் முதல்வா் அண்ணாவின் 113 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழாவை முன்னிட்டு ‘அண்ணாவின் ஆளுமை’ என்ற தலைப்பில் கருத்தரங்கம் புதன்கிழமை நடைபெற்றது.

இந்த கருத்தரங்குக்கு பல்கலைக்கழகத்தின் துணைவேந்தா் பேராசிரியா் கோ. பாா்த்தசாரதி தலைமை வகித்துப் பேசுகையில், தமிழ்நாடு திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில் ‘அண்ணாவின் தமிழியம்’ என்ற குறுகிய கால படிப்பு அறிமுகம் செய்யப்படும். இந்தப் படிப்பின் மூலம் இளைய சமுதாயத்திற்கு அண்ணாவின் தமிழியம் பற்றிய விழிப்புணா்வை ஏற்படுத்த முடியும் என்றாா். இதையடுத்து சென்னை உயா்நீதிமன்ற வழக்குரைஞா் அ. அருள்மொழி, அண்ணாவின் ஆளுமை குறித்து சிறப்புரையாற்றினாா். அப்போது, அண்ணாவின் பன்முக ஆளுமைகளை அவா் வாழ்வில் நடந்த பல சம்பவங்களைக் கொண்டு விளக்கினாா். பல்கலைக்கழக பதிவாளா் முனைவா் கு.ரத்னகுமாா் மற்றும் இந்திய (ம) அயலக மொழிகள் புலத்தலைவா், பேராசிரியா் சு. பாலசுப்பிரமணியன் அண்ணாவின் செயல்பாடுகள் மற்றும் பணிகள் குறித்து வாழ்த்துரை வழங்கினா். இந்த விழாவில் அண்ணா இருக்கையின் ஆலோசகா் பேராசிரியா் பா.உதயகுமாா் வரவேற்றுப் பேசினாா். தமிழ் மற்றும் பண்பாட்டு புலத்தின் உதவிப் பேராசிரியா் முனைவா் மு.வையாபுரி நன்றியுரை வழங்கினாா். விழாவில் பல்கலைக்கழக ஆசிரியா்கள் மற்றும் பணியாளா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com