படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டையை மத்திய அரசு வழங்க உள்ளது: மத்திய இணையமைச்சர் எல். முருகன் 

படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டையை மத்திய அரசு வழங்க உள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார்.  
படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டையை மத்திய அரசு வழங்க உள்ளது: மத்திய இணையமைச்சர் எல். முருகன் 

படகு இல்லாத மீனவர்களுக்கும் கிசான் அட்டையை மத்திய அரசு வழங்க உள்ளது என மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்தார். 
திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காட்டில் மீனவ மக்கள் சந்திப்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் மத்திய தகவல் ஒலிபரப்பு, மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வளத்துறை இணை அமைச்சர் திரு. எல். முருகன், தமிழக மீன்வள இயக்குனர் பழனிசாமி, திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் திரு. ஆல்பி ஜான் வர்கீஸ், பொன்னேரி சட்டமன்ற உறுப்பினர் துரை. சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டனர். 
நிகழ்ச்சியில் மத்திய இணை அமைச்சர் எல் முருகன் பேசுகையில், பழவேற்காடு முகத்துவாரத்தை நிலைப்படுத்தும் பணிக்காக 26.85 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இதற்கான ஆய்வுகள் நடந்து வருகிறது. விரைவில் இது செயல்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்தார். மேலும் அவர் பேசுகையில், நாடு முழுவதும் துறைமுகம் அரசு அமைக்க மிக முக்கிய நடவடிக்கை எடுத்து வருகிறது. 
சென்னை காசிமேடு உள்பட நாடு முழுவதும் 5 துறைமுகங்கள் சர்வதேச அளவில் தரம் உயர்த்தப்பட உள்ளன என்றும், இத்தோடு தமிழகத்தில் புதிய 6 துறைமுக கட்டுமான பணிகள் நடந்து வருகிறது என்றும் தெரிவித்தார். பழவேற்காடு துறைமுகம் அமைக்க தமிழக அரசு ஆராய்ந்து, கோரிக்கை வைத்தால் மத்திய அரசு நடவடிக்கை எடுக்கும் என்றார். கடற்பாசி வளர்ப்பு வருமானம், வேலைவாய்ப்பு தரும் தொழிலாக உள்ளது. 

இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழகத்தில் கடற்பாசி வளர்ப்புக்கு மத்திய பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியாகி உள்ளது என்று மகிழ்ச்சி தெரிவித்தார். மேலும், பிரதமரின் வீடு வழங்கும் திட்டத்தில் அனைவருக்கும் வீடு வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி வீடு இப்பகுதி மக்கள் வீடுகளை பெற ஏற்பாடு செய்யப்படும் என்றார். தமிழகத்தில் 700 கிமீ. தூர கடற்கரை உள்ளது என்றும், இதனால் தமிகத்தில் மிகப்பெரிய தொழில் வளர்ச்சி உள்ளது என்றும் தெரிவித்த அவர், நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் மீனவர்களின் பங்கு உள்ளது என்று கூறினார். 
மேலும், படகு இல்லாத அனைத்து மீனவர்களுக்கும் கிசான் அட்டை வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com