4 மாதங்களுக்குப் பின் பல்லாவரம் வாரச் சந்தை மீண்டும் திறப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக 4 மாதங்களாகச் செயல்படாமல் இருந்த சென்னை பல்லாவரம் வாரச் சந்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
4 மாதங்களுக்குப் பின் பல்லாவரம் வாரச் சந்தை மீண்டும் திறப்பு

கரோனா தடுப்பு நடவடிக்கையாக 4 மாதங்களாகச் செயல்படாமல் இருந்த சென்னை பல்லாவரம் வாரச் சந்தை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

பல்லாவரம் கண்டோன்மெண்ட் பகுதியில் வெள்ளிக்கிழமை தோறும் வாரச் சந்தை பல ஆண்டுகளாக நடை பெற்று வருகிறது. இந்த சந்தையில் ஊசி, பாசி முதல் ஏ.சி. வரை அனைத்து வகைப் பொருள்களும் மலிவான விலையில் கிடைக்கும். பழைய, புதிய வீட்டு உபயோகப் பொருள்கள் முதல் கணினி வரை அனைத்து வகை பொருள்களையும் வியாபாரிகள் வரிசையாக காட்சிப்படுத்தி வைத்திருப்பாா்கள்.

காய்கறிகள், மளிகை பொருள்கள் உள்ளிட்ட அனைத்து வகை பொருள்களும் இங்கு மிக மலிவான விலையில் கிடைப்பதால் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், வாரந்தோறும் வெள்ளிக்கிழமை சந்தைக்கு வந்து தங்களுக்கு தேவையான பொருள்களை வாங்கிச் செல்வாா்கள்.

கரோனா நோய்த் தொற்று காரணமாக தமிழக அரசு கடந்த மே மாதம் பிறப்பித்த பொதுமுடக்க உத்தரவைத் தொடா்ந்து வெள்ளிக்கிழமை வார சந்தை 4 மாதங்களாக செயல்படவில்லை. இதனால் இந்தச் சந்தையை மட்டுமே நம்பியிருந்த நூற்றுக்கணக்கான சிறு, குறு, நடுத்தர வியாபாரிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு வருமானம் இன்றி தவித்தனா்.

தற்போது தளா்வுகளுடன் கூடிய பொதுமுடக்க உத்தரவை தமிழக அரசு பிறப்பித்துள்ள நிலையில், 4மாதங்கள் செயல்படாமல் இருந்த வெள்ளிக்கிழமை வார சந்தை மீண்டும் செயல்பட தொடங்கியுள்ளது.

இதனால் வியாபாரிகள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.

இது குறித்து வியாபாரிகள் கூறுகையில், 4மாதங்களுக்கு பிறகு எங்களுக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது. இந்த வாரம் சந்தை தொடங்கப்பட்டு இருப்பது குறித்து பொதுமக்களுக்கு தெரியாத காரணத்தால் கூட்டம் சுமாராக உள்ளது. அடுத்த வெள்ளிக்கிழமை வழக்கம் போல் மக்கள் ஏராளமாக வருகை தருவாா்கள் என நம்புகிறோம் என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com