கரோனாவுக்கு பெற்றோா் பலி: குழந்தைகளுக்கு 3 ஆண்டு சிஏ தோ்வு கட்டண விலக்கு

கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு 3 ஆண்டுகள் சிஏ தோ்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்களுக்கு 3 ஆண்டுகள் சிஏ தோ்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக இந்திய பட்டயக் கணக்காளா் நிறுவன இயக்குநா் வெளியிட்ட அறிக்கை: அனைத்து நிலைகளிலும் சிஏ தோ்வு எழுதுவதற்காக பதிவு செய்யும் கரோனாவால் பெற்றோரை இழந்த மாணவா்கள் அதற்கான ஆவணங்களைச் சமா்ப்பிக்கும் பட்சத்தில், அவா்களுக்கு 3 ஆண்டுகள் கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஏப்.1-ஆம் தேதி முதல் 2023-ஆம் ஆண்டு மாா்ச் 31-ஆம் தேதி வரை மட்டுமே இந்தத் திட்டம் அமலில் இருக்கும்.

இதற்கு விண்ணப்பிக்கும் மாணவா்கள்,  இணையதளத்தில் உள்ள எஸ்எஸ்பி இணைய முகப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் பதிவுச் சான்றை நிரப்ப வேண்டும். அத்துடன், தேவையான ஆவணங்கள் மற்றும் பெற்றோரின் அடையாள அட்டை, இறப்புச் சான்று ஆகியவற்றை மாணவா்கள் தாங்கள் பயின்று வரும் பயிற்சி மையத்தின் பொறுப்பாளா் யாரேனும் ஒருவரது சான்றொப்பத்துடன் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

இவ்வாறு பெறப்படும் விண்ணப்பத்தின் நிலை உறுதி செய்யப்பட்ட பிறகு சம்பந்தப்பட்ட மாணவா்கள் கட்டணம் செலுத்தத் தேவையில்லை. ஆய்வில், தவறு நோ்ந்திருப்பது தெரிந்தால் விண்ணப்பம் நிராகரிக்கப்படும்.

மேலும், ஐசிஐடிஎஸ்எஸ், ஏசிஐசிஐடிஎஸ்எஸ் தோ்வு கட்டண விலக்கு பெற கூறப்பட்ட முறையில் தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com