பி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்

பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்டு பொறியியல் படிப்பில் சேரவிருக்கும் மாணவர்கள், தாங்கள் படிக்க விரும்பும் கல்லூரியை தேர்வு செய்யும் முறை குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.
பி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்
பி.இ. கவுன்சிலிங் செல்வோர் இதை மட்டும் நம்ப வேண்டாம்


பொறியியல் கலந்தாய்வில் கலந்து கொண்டு பொறியியல் படிப்பில் சேரவிருக்கும் மாணவர்கள், தாங்கள் படிக்க விரும்பும் கல்லூரியை தேர்வு செய்யும் முறை குறித்து நிபுணர்கள் விளக்கம் அளித்துள்ளனர்.

தமிழ்நாடு பொறியியல் சேர்க்கைக்கான டிஎன்இஏ இணைதயளத்தில், கல்லூரியின் தரவரிசைப் பட்டியல், கட்ஆஃப் மதிப்பெண் ஆகியவை பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதுபோல, ஒவ்வொரு கல்லூரியின் மாணவர்களின் கல்வித் தரம் குறித்த விவரங்களும் அதில் இடம்பெற்றுள்ளன. அதில், அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் இணைந்த 343 பொறியியல் கல்லூரிகளில், கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் / டிசம்பரில் நடத்தப்பட்ட தேர்வில் மாணவர்களின் தேர்ச்சி விகிதமானது 80 சதவீதமாக உள்ளது. 

அதுபோலவே, கலந்தாய்வில் பங்கேற்கும் 411 பொறியியல் கல்லூரிகளில் 400 கல்லூரிகள், மாணவர்களின் தேர்ச்சி விகிதம் 50 சதவீதத்துக்கும் மேல் உள்ளது.

ஆனால்,  இதுவே 2019ஆம் கல்வியாண்டை எடுத்துக் கொண்டால், ஒட்டுமொத்த கல்லூரிகளில் வெறும் 57 பொறியியல் கல்லூரிகள்தான் 50 சதவீதத்துக்கும் மேல் மாணவர்களின் தேர்ச்சி விகிதத்தைப் பெற்றிருந்தன.

எனவே, இது குறித்து நிபுணர்கள் கூறுவது என்னவென்றால், கடந்த ஜூலையில் நடத்தப்பட்ட தேர்வு, போதிய கண்காணிப்பின்றி, ஆன்லைன் முறையில் நடத்தப்பட்டுள்ளது.

தற்போது நடைபெறும் கலந்தாய்வில் பங்கேற்கவிருக்கும் மாணவர்கள், தங்களுக்கான கல்லூரிகளை தேர்வு செய்யும் போது, இந்த புள்ளி விவரங்களைப் பார்த்தால் தெளிவு ஏற்படுவதற்கு பதிலாக குழப்பமே ஏற்படும்.  எனவே, பொறியியல் கல்லூரியை தேர்வு செய்யும்போது, இந்த புள்ளி விவரங்களை அடிப்படையாக வைத்து எந்தக் கல்லூரியையும் மதிப்பிட வேண்டாம் என்கிறார் அண்ணா பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் இ. பாலகுருசாமி.

ஒருவேளை இந்த புள்ளி விவரங்களைப் பார்த்தால், தமிழகத்தில் உள்ள அனைத்து பொறியியல் கல்லூரிகளுமே சிறந்தவைதான் என்கிறார் அவர்.

எனவே, இணையதளத்தில் இருக்கும் புள்ளி விவரங்களை மட்டுமே கருத்தில் கொள்ளாமல், ஒரு கல்லூரியை தேர்வு செய்யும் முன், அங்கு பயிலும் மாணவர்களிடம் கருத்துகளைக் கேட்டறியலாம் அல்லது, கல்லூரி பற்றி வேறு பரிந்துரைகளை அலசி ஆராயலாம் என்கிறார் கல்வி ஆலோசகர் ஜெயப்பிரகாஷ் காந்தி


பட்டியலிலிருக்கும் அனைத்துக் கல்லூரிகளுமே சிறந்தவை என்று காண்பிக்கப்படும்போது, எந்தக் கல்லூரியை தேர்வு செய்வது என்பது மாணவர்களுக்கு மிகவும் சவாலானதாக இருக்கும் என்றும் ஜெயப்பிரகாஷ் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com