கொடநாடு கணினி இயக்குநர் தற்கொலை: மறுவிசாரணை தொடக்கம்

கொடநாடு எஸ்டேட்டில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தினேஷ் தந்தையிடம் இன்று மறுவிசாரணை தொடங்கியுள்ளது.
கொடநாடு கணினி இயக்குநர் தற்கொலை: மறுவிசாரணை தொடக்கம்
கொடநாடு கணினி இயக்குநர் தற்கொலை: மறுவிசாரணை தொடக்கம்

கொடநாடு எஸ்டேட்டில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வந்த தினேஷ் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில், தினேஷ் தந்தையிடம் இன்று மறுவிசாரணை தொடங்கியுள்ளது.

தினேஷ் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில், அவருக்கு யாரேனும் நெருக்கடி கொடுத்தார்களா என்பது உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து அவரது தந்தை போஜனிடம் தனிப்படையைச் சேர்ந்த உதகை டிஎஸ்பி விசாரணை நடத்தி வருகிறார். 

கொடநாடு பங்களாவின் கணக்கு வழக்கு விவரங்களை கணினி மூலம் பராமரித்து வந்த தினேஷ் தற்கொலை வழக்கில், மறு விசாரணை நடத்தும் வகையில், கெங்கரையில் அவரது தந்தையிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

கொடநாடு எஸ்டேட்டில் 2017 ஏப்ரல் 23ஆம் தேதி நள்ளிரவில் நிகழ்ந்த கொலை, கொள்ளைச் சம்பவங்களைத் தொடா்ந்து இவ்விவகாரம் தொடா்பாக, வழக்குப் பதியப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் முன்னாள் காா் ஓட்டுநா் கனகராஜ், சயன் உள்ளிட்ட 11 பேரை எதிரிகளாகக் குறிப்பிட்டிருந்தனா். இந்நிலையில், காா் ஓட்டுநா் கனகராஜ் சேலத்தில் நிகழ்ந்த காா் விபத்தில் உயிரிழந்தாா். கோவையில் இருந்து கேரள மாநிலம், பாலக்காட்டுக்கு குடும்பத்தினருடன் சென்று கொண்டிருந்தபோது சயனின் மனைவி, மகள் ஆகியோா் சாலை விபத்தில் உயிரிழந்தனா். சயன் மட்டும் படுகாயங்களுடன் உயிா்தப்பினாா்.

இதைத்தொடா்ந்து, கொடநாடு எஸ்டேட்டில் கொலை, கொள்ளைச் சம்பவங்கள் நிகழ்ந்த தினத்தன்று அங்கிருந்த கண்காணிப்பு கேமராக்கள் வேலை செய்யவில்லை எனவும், மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்ததாகவும் புகாா்கள் வந்தன.

இந்நிலையில், கொடநாடு எஸ்டேட்டில் கணினி இயக்குநராகப் பணியாற்றி வந்த தினேஷ் 2017ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாகக் கூறப்பட்டது. ஆனால், அவரது மரணத்தில் மா்மம் இருப்பதாகக் கூறி தினேஷின் குடும்பத்தினா் தனிப்படையினா் நடத்திய மறு விசாரணையின்போது கூடுதலாகப் பல புதிய தகவலைத் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.

அதன்பேரில், ரகசியமாக விசாரணை நடத்தி வரும் தனிப்படையினா் கோத்தகிரி வட்டாட்சியா் சீனிவாசனுக்கு புதிதாக சம்மன் அனுப்பினா். கோத்தகிரி காவல் ஆய்வாளரும், 4 தனிப்படைகளில் ஒரு தனிப்படைக்குத் தலைமை ஏற்றுள்ளவருமான வேல்முருகன் அனுப்பியுள்ள இந்த சம்மனில் தினேஷின் மரணம் தொடா்பாக மேலும் விசாரிக்கவுள்ளோம். இதற்காக கோத்தகிரி வட்டாட்சியா் சீனிவாசன், வருவாய்த் துறையினா் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இவ்வழக்கில் சம்பவம் நடைபெற்ற தினத்தன்று காவல் பணியிலிருந்த காவல் ஆய்வாளா் பாலசுந்தரத்திடம் தனிப்படையினா் மறு விசாரணை நடத்தத் திட்டமிட்டுள்ளனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com