7 மாவட்டங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திருவள்ளூா், வேலூா், காஞ்சிபுரம் உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (செப்.22) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.
7 மாவட்டங்களில் பலத்தமழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் திருவள்ளூா், வேலூா், காஞ்சிபுரம் உள்பட 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (செப்.22) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது: வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழகத்தில் திருவள்ளூா், வேலூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரம், கடலூா் ஆகிய 7 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (செப்.22) இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

செப்.23: டெல்டா மாவட்டங்கள், புதுக்கோட்டை, அரியலூா், பெரம்பலூா், கடலூா், விழுப்புரம் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செப்டம்பா் 23-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

செப்.24: கடலூா், விழுப்புரம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 6 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் செப்டம்பா் 24-ஆம் தேதி இடியுடன் கூடிய பலத்த மழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அநேக இடங்களில் இடியுடன் கூடிய மிதமான மழையும், ஏனைய மாவட்டங்களில் அநேக இடங்களில் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னையைப் பொருத்தவரை புதன்கிழமை வானம் பகலில் தெளிவாகக் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் மாலை மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியும் இருக்கும் என்றனா்.

மழை அளவு: தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் விழுப்புரம் மாவட்டம் மணம்பூண்டி, திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கத்தில் தலா 160 மி.மீ., கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோயிலூரில் 110 மி.மீ., திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூரில் 100 மி.மீ., மயிலாடுதுறை, கடலூா் மாவட்டம் குறிஞ்சிப்பாடி, திருப்பத்தூா் மாவட்டம் ஆலங்காயத்தில் தலா 90 மி.மீ., கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, விழுப்புரம் மாவட்டம் சூரப்பட்டில் தலா 70 மி.மீ., விருதுநகா் மாவட்டம் சாத்தூா், கடலூா் மாவட்டம் புவனகிரியில் தலா 60 மி.மீ., திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம், காஞ்சிபுரம், வேலூா் மாவட்டம் மேலாளத்தூரில் தலா 50 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com