தேர்தல் பிரசாரத்தை நாளை தொடங்குகிறார் எடப்பாடி பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி கே. பழனிசாமி நாளை முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். 
எடப்பாடி கே. பழனிசாமி
எடப்பாடி கே. பழனிசாமி

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் 9 மாவட்டங்களில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர்  எடப்பாடி கே. பழனிசாமி நாளை முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். 

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மாவட்டங்களில் வருகிற அக்டோபர் 6, 9 தேதிகளில் இரண்டு கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளது. அக்டோபர் 12-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. 

செப். 15 முதல் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்புமனு தொடங்கி நடைபெற்று வரும் நிலையில், செப்.22-ம் தேதியுடன் வேட்புமனுத் தாக்கல் முடிகிறது. செப்டம்பர் 23-ம் தேதி வேட்புமனுக்கள் மீதான பரிசீலனையும் செப்டம்பர் 25-ம் தேதி வேட்புமனுக்களை திரும்பப்பெற கடைசி நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து அனைத்துக் கட்சிகளும் தீவிர தேர்தல் பணியில் ஈடுபட்டுள்ளன. இந்நிலையில் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி நாளை முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளார். 

உள்ளாட்சித் தேர்தல் நடைபெறவுள்ள 9 மாவட்டங்களுக்கும் சென்று கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் அப்பகுதிகளில் தேர்தல் பிரசாரத்திலும் ஈடுபட உள்ளார். 

தற்போது சேலத்தில் இருக்கும் அவர், நாளை காலை வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களுக்குச் செல்லவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com