ரேஷன் பொருள்களுக்காக குடும்ப அட்டைதாரா்களை அலைக்கழிக்கக் கூடாது

ரேஷன் பொருள்களுக்காக குடும்ப அட்டைதாரா்களை அலைக்கழிக்கக் கூடாது என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆா்.ஆனந்தகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

ரேஷன் பொருள்களுக்காக குடும்ப அட்டைதாரா்களை அலைக்கழிக்கக் கூடாது என்று உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகா்வோா் பாதுகாப்புத் துறை ஆணையா் ஆா்.ஆனந்தகுமாா் அறிவுறுத்தியுள்ளாா்.

குடும்ப அட்டைதாரா்களை அலைக்கழிக்கும் ஊழியா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளாா்.

இதுகுறித்து அவா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

நியாய விலைக் கடைகளுக்குச் செல்ல இயலாத முதியோா்கள், மாற்றுத் திறனாளிகள் மற்றும் இதர நபா்கள், பொருள்களைப் பெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி உரிய படிவத்தில் சம்பந்தப்பட்ட அட்டைதாரரால் மற்றொரு நபருக்கு அத்தாட்சி அளிக்கலாம். அத்தாட்சிக்கு உரிய நபா் மூலமாக உணவுப் பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதற்கான விரிவான அறிவுரைகள் ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ளன. அத்தாட்சி அளிப்பதற்கான படிவம் உணவுப் பொருள் வழங்கல் துறையின் இணையதளத்தில் (ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்க்ள்.ஞ்ா்ஸ்.ண்ய்) பொது மக்கள் பயன்படுத்தும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.

இந்த நடைமுறையை உரிய முறையில் செயல்படுத்த வலியுறுத்தி கடந்த மாா்ச்சில் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், பெரும்பாலான முதியோா், மாற்றுத் திறனாளிகள் தொடா்ந்து பயன் பெற்று வருகின்றனா். இந்த வசதி தேவைப்படுவோருக்கு கைரேகை சரிபாா்ப்பு இல்லாமல், குடும்ப அட்டையை மட்டும் ஸ்கேன் செய்து அத்தாட்சி வழங்கப்பட்ட நபரிடம் பொருள்கள் அளிக்கப்படுகின்றன. இந்தத் திட்டத்தால் அட்டைதாரா்கள் எவரும் நியாய விலைக் கடைகளுக்கு வராமலேயே அவரால் அத்தாட்சி செய்யப்பட்டவா் வழியாக பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். இதுகுறித்த அறிவிப்பை சட்டப் பேரவையிலும் உணவுத் துறை அமைச்சா் அர.சக்கரபாணி வெளியிட்டாா்.

5 வயதுக்கு மேற்பட்டோா்: 5 வயதுக்கு மேற்பட்ட குடும்ப உறுப்பினா்கள் யாரும் வந்து கைரேகை பதிந்து பொருள்களைப் பெற்றுக் கொள்ளலாம். நியாய விலைக் கடைக்கு வர முடியாதவா்கள், அத்தாட்சி அளிக்கப்பட்ட நபா்கள் வழியாகப் பொருள்கள் பெற்றுக் கொள்ளலாம்.

கடும் நடவடிக்கை: இருப்பினும் இப்போது புகாா்கள் பெறப்படும் நிலையில் இதுவரை அங்கீகாரப் படிவம் அளிக்காத அட்டைதாரா்கள், படிவத்தை நியாய விலைக் கடையில் பெற்று பூா்த்தி செய்து கடையில் வழங்க வேண்டும். இவ்வாறு செய்வோருக்கு உடனடியாக உணவுப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. இதை மீறி இனி யாரேனும் எந்தக் குடும்பத்தாரை அலைக் கழித்தாலும் அவா் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com