நீட் பாதிப்பு அறிக்கை: ஏ.கே.ராஜன் குழுவை வாழ்த்திய கமல்ஹாசன்

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு மக்கள் நீதி மய்யம் சார்ப்பில் கமல்ஹாசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீட் தேர்வின் பாதிப்பு குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவிற்கு மக்கள் நீதி மய்யம் சார்ப்பில் கமல்ஹாசன் பாராட்டுத் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் நீட் தேர்வு குறித்து ஆராய்ந்து ஏ.கே.ராஜன் குழு அரசுக்கு அளித்த பரிந்துரை அறிக்கையை திங்கள்கிழமை வெளியிடப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நீட் தேர்வை ரத்து செய்யத் தேவையான நடவடிக்கைகளை தமிழக அரசு உடனடியாகத் தொடங்கலாம் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிக்கை குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கையில்,

“நீட் ஓர் உயிர்கொல்லித் தேர்வு என்பதை உரக்கச் சொல்கிறது நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவின் அறிக்கை.

கிராமப்புற ஏழை மாணவர்கள், தமிழ் வழியில் பயின்றோர் மருத்துவராகும் கனவை இத்தேர்வு சிதைக்கிறது. நீட் தேர்வுக்கு பின் மருத்துவப் படிப்பில் சேர்ந்த தமிழ் வழியில் பயின்ற மாணவர்களின் எண்ணிக்கை 14.44 சதவீதத்திலிருந்து வெறும் 1.7 சதவீதமாகச் சரிந்துள்ளது. இது சமத்துவத்திற்கும் சமூகநீதிக்கும் எதிரான தேர்வு என்பதற்கு இந்த ஒரு புள்ளி விவரமே போதுமானது.

உண்மையை வெளிக்கொணர்ந்து சட்டப் போராட்டத்திற்கான வழிவகைகளையும் ஆராய்ந்து சொன்ன ஏ.கே.ராஜன் குழுவிற்கு மக்கள் நீதி மய்யம் சார்பாக நெஞ்சார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம். இக்குழுவின் பரிந்துரைகளின்படி விரைவில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.”

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com