தோட்டக்கலை துறையில் சிறந்த விஞ்ஞானியாக பேராசிரியர் சுப்பையா தேர்வு

தேனி மாவட்டத்தில் உள்ள திராட்சை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சுப்பையா தோட்டக்கலை துறையின் சிறந்த விஞ்ஞானி -  2021 ஆக தேர்வு செய்யப்பட்டார்.
பேராசிரியர் ஆ.சுப்பையாவிற்கு நெக்ஸ்ட் ஜென்  ஹார்டி - 2021 தோட்டக்கலைத்துறையில் சிறந்த விஞ்ஞானி  என்ற விருதினை வழங்கிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் என். குமார்.
பேராசிரியர் ஆ.சுப்பையாவிற்கு நெக்ஸ்ட் ஜென்  ஹார்டி - 2021 தோட்டக்கலைத்துறையில் சிறந்த விஞ்ஞானி  என்ற விருதினை வழங்கிய தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் என். குமார்.



கம்பம்: தேனி மாவட்டத்தில் உள்ள திராட்சை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் சுப்பையா தோட்டக்கலை துறையின் சிறந்த விஞ்ஞானி -  2021 ஆக தேர்வு செய்யப்பட்டார்.

கோயம்புத்தூரில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் தோட்டக்கலை துறை சார்பில் பன்னாட்டு கருத்தரங்கு செப்.16 முதல் 20 வரை நடைபெற்றது. 

பன்னாட்டுக் கருத்தரங்கில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களின் வேளாண்மை துறை பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள், ஆராய்ச்சியாளர்கள், பேராசிரியர்கள் கலந்துகொண்டனர்.

கருத்தரங்கில் அடுத்த தலைமுறைக்கான தோட்டக்கலைத்துறை 2021 என்ற தலைப்பில் தேனி மாவட்டத்திலுள்ள திராட்சை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் ஆ. சுப்பையா  அறிக்கை சமர்ப்பித்து பேசினார். 

கருத்தரங்கில் சமர்ப்பித்த அறிக்கையில், திராட்சை மற்றும் உள்ளிட்ட தோட்டப் பயிர்களின் சாகுபடி, தொழில் நுட்பங்களை பயன்படுத்தி அதிக மகசூல் எடுப்பது உள்ளிட்டவைகள்,  மேலும் விவசாயிகள் அதிக லாபம் பெறுவது, அவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக ஆலோசனைகளையும் தெரிவித்திருந்தார்.

இவர் சமர்ப்பித்த  அறிக்கை சிறந்த அறிக்கையாக கருத்தரங்கில் தேர்வு செய்யப்பட்டது. அதன்பேரில்  பேராசிரியர் ஆ.சுப்பையாவிற்கு நெக்ஸ்ட் ஜென்  ஹார்டி - 2021 தோட்டக்கலைத்துறையில் சிறந்த விஞ்ஞானி  என்ற விருதினை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக துணைவேந்தர் என். குமார் வழங்கினார். 

சிறந்த விஞ்ஞானியாக தேர்வு பெற்ற பேராசிரியர் மற்றும் தலைவர் ஆ.சுப்பையாவை, திராட்சை ஆராய்ச்சி நிலைய  பேராசிரியர்கள், அலுவலர்கள் மற்றும் விவசாயிகள் பாராட்டு தெரிவித்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com