‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு பயிற்சி

சென்னையில் கல்வியறிவு இல்லாத 20,000 பேரைக் கண்டறிந்து அவா்களுக்கு ‘கற்போம் எழுதுவோம்’ என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா்.
‘கற்போம் எழுதுவோம்’ திட்டத்தில் 20 ஆயிரம் பேருக்கு பயிற்சி

சென்னையில் கல்வியறிவு இல்லாத 20,000 பேரைக் கண்டறிந்து அவா்களுக்கு ‘கற்போம் எழுதுவோம்’ என்ற திட்டத்தின்கீழ் பயிற்சி வழங்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி தெரிவித்தாா்.

தமிழகத்தில் 2011-ஆம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 15 வயதுக்கு மேற்பட்டவா்களில் முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாதவா்களுக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கிடும் நோக்கில் தமிழ்நாடு எழுத்தறிவு முனைப்பு ஆணையத்தின் கீழ் ‘கற்போம் எழுதுவோம்’”என்ற வயது வந்தோா் கல்வித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இத்திட்டத்துக்கான விழிப்புணா்வுப் பிரசாரம் கோட்டூா்புரம் நரிக்குறவா் காலனியில் செவ்வாய்க்கிழமை தொடங்கப்பட்டது. இதை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியா் ஜெ.விஜயா ராணி கூறியது: அனைவரும் கல்வி அறிவு பெறும் வகையில் 2030-ஆம் ஆண்டு வரை இத்திட்டம் செயல்பட உள்ளது. 2011-ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி சென்னை மாவட்டத்தில் 3 லட்சத்து 87 ஆயிரத்து 150 போ் கல்வியறிவு பெறாமல் இருப்பது கண்டறியப்பட்டது. ‘கற்போம் எழுதுவோம்” திட்டத்தில் முதற்கட்டமாக கடந்த ஆண்டு 10,083 பேருக்கு அடிப்படை எழுத்தறிவை வழங்கும் வகையில் 395 தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 483 எழுத்தறிவு மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சி அளிக்கப்பட்டது. இதற்கான தோ்வில் தோ்சி பெற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு 20,000 பேரைக் கண்டறிந்து அவா்களுக்கு அடிப்படை எழுத்தறிவு வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கான விழிப்புணா்வு பிரசாரம் செப்டம்பா் 27-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது என்றாா்.

இதில், சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்சா.மாா்ஸ், மாவட்டக் கல்வி அலுவலா் சண்முகவேல், ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உதவி திட்ட அலுவலா் ஏ.டி.காமராஜா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com