தம்மம்பட்டியில் பொதுமக்களுக்கு அச்சமூட்டிய குதிரை மீட்பு!

தம்மம்பட்டியில் மக்கள், வாகன ஓட்டிகளுக்கு அச்சமூட்டிய குதிரையை கால்நடைதுறையினர் மீட்டனர்.
தம்மம்பட்டியில் மக்கள், வாகன ஓட்டிகளுக்கு அச்சமூட்டிய குதிரை
தம்மம்பட்டியில் மக்கள், வாகன ஓட்டிகளுக்கு அச்சமூட்டிய குதிரை


தம்மம்பட்டி: தம்மம்பட்டியில் மக்கள், வாகன ஓட்டிகளுக்கு அச்சமூட்டிய குதிரையை கால்நடைதுறையினர் மீட்டனர்.

சேலம் மாவட்டம், தம்மம்பட்டி, செந்தாரப்பட்டி பகுதியில், ஆண் குதிரை ஒன்று, மக்களை தாக்குவதற்கு துரத்தியும், சாலையில் செல்லும் வாகனங்களை துரத்திச் சென்று தாக்கி, அவற்றின் கண்ணாடிகளை சேதப்படுத்தி வந்தது. 

இதுகுறித்து, தம்மம்பட்டியில் உள்ள யங் டைமன்ஸ் கிரிக்கெட் கிளப் சார்பில், புகார் தெரிவிக்கப்பட்டது. அதையடுத்து, கெங்கவல்லி தாசில்தார் வள்ளமுனியப்பன் தலைமையில், கால்நடை மருத்துவக்குழுவினர், மக்கள் உதவியுடன் குதிரையை பிடித்தனர். 

அதற்கு, சிகிச்சை அளிக்கப்பட்டதை அடுத்து, தலைவாசல் கால்நடை பூங்காவில் உள்ள கால்நடை ஆராய்ச்சி மையத்தில் குதிரையை ஒப்படைத்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com