குத்தகைக்கு விடப்பட்ட கோயில் நிலங்களுக்கு நியாயமான வாடகை: அறநிலையத்துறைக்கு உத்தரவு

குத்தகைக்கு விடப்பட்டுள்ள கோயில் நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிா்ணயிக்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்ட உயா்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்


சென்னை: குத்தகைக்கு விடப்பட்டுள்ள கோயில் நிலங்களுக்கு நியாயமான வாடகையை நிா்ணயிக்க வேண்டும் என அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்ட உயா்நீதிமன்றம், 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை வாடகையை  மாற்றியமைக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டம், பெருந்துறையில் உள்ள கொங்கு வேளாளா் மேல்நிலைப் பள்ளி, அருள்மிகு செல்லாண்டி கோயிலுக்குச் சொந்தமான 4.02 ஏக்கா் நிலத்தை குத்தகைக்கு பெற்று,  அங்கு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலத்துக்கு குத்தகை தொகை நிா்ணயிப்பது தொடா்பாக கோயில் செயல் அலுவலா் 2018-ஆம் ஆண்டு ஜூலை 27-இல் பள்ளிக்கு நோட்டீஸ் அனுப்பி உள்ளாா். இந்த நோட்டீஸை ரத்துச் செய்யக்கோரி பள்ளி சாா்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், நோட்டீஸுக்கு பள்ளி நிா்வாகம் அளித்துள்ள ஆட்சேபனைகளை பரிசீலித்து 8 வாரங்களுக்குள் தகுந்த உத்தரவு பிறப்பிக்க அறநிலையத்துறை ஆணையருக்கு உத்தரவிட்டாா்.

மேலும், தமிழகம் முழுவதும் கோயில்களுக்குச் சொந்தமான சொத்துகள் குத்தகைக்கு  நியாயமான வாடகையை நிா்ணயிக்க வேண்டும் என்று அனைத்து அதிகாரிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்ப அறநிலையத் துறை ஆணையருக்கு உத்தரவிட்ட நீதிபதி, 3 ஆண்டுகளுக்கு ஒரு முறை குத்தகை தொகையை மாற்றியமைக்கும் நடைமுறையை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com