மணப்பாறையில் 3 மணி நேரமாக பெய்த கனமழை: 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் தவிப்பு 

மணப்பாறையில் 3 மணி நேரமாக தொடர்ந்து பெய்த கன மழையால் குளங்கள் நிரம்பி வழிந்து குடியிருப்பு பகுதிகளில்புகுந்ததால் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் புகுந்ததால், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின
மணப்பாறையில் வெள்ளிக்கிழமை இரவு  பெய்த கனமழையில் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்பு பகுதிகள்.
மணப்பாறையில் வெள்ளிக்கிழமை இரவு பெய்த கனமழையில் வெள்ளக்காடாக காட்சியளிக்கும் குடியிருப்பு பகுதிகள்.

மணப்பாறையில் 3 மணி நேரமாக தொடர்ந்து பெய்த கன மழையால் குளங்கள் நிரம்பி வழிந்து குடியிருப்பு பகுதிகளில்புகுந்ததால் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகளில் புகுந்ததால், உடமைகளை இழந்து மக்கள் தவித்து வருகின்றனர்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் வடக்கு கிழக்கு பருவமழை தொடங்கி, கடந்த இரு தினங்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. 

மணப்பாறையில் வெள்ளிக்கிழமை இரவு  பெய்த கனமழையில் சாலைகளில் வடிகால் இன்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மழை நீர்.

இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு 8.30 மணியளவில் தொடங்கிய கனமழை காற்று இல்லாமல் நின்று நிதானமாக பேய் மழையாக கொட்டி தீர்த்தது. 

சாலைகளில் மழை நீர் வடிகால் இன்றி தேங்கி நின்றதால் பேருந்து நிலையம் முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது. போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டது. 

இதில், கரிக்கான் குளம், அப்பு ஐயர் குளம், காடுமுனியப்பன் கோவில் ஊரணி, அத்திக்குளம் ஆகியவை நிரம்பி வழிய தொடங்கியது. போதிய வடிகால் வாய்க்கால் பாதைகளின்றி குளத்திலிருந்து வெளியேறிய நீர் முழுவதும் அருகில் இருந்த குடியிருப்பு பகுதிகளில் புகுந்தது. சுமார் 200-க்கும் மேற்பட்ட வீடுகளில் மழை நீர் புகுந்ததால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளுக்கு வந்தனர். 

மணப்பாறையில் வெள்ளிக்கிழமை இரவு  பெய்த கனமழையில் வடிகால் இன்றி தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கும் கோயில் பகுதி.


தகவல் அறிந்து சட்டப்பேரவை உறுப்பினர் ப.அப்துல்சமது, வட்டாட்சியர் லஜபதிராஜ் மற்றும் நகராட்சி ஆணையர் செந்தில் ஆகியோரது துரித முயற்சியால் வீடுகளை வீட்டு வந்த மக்கள் அருகில் உள்ள பள்ளிவாசல், மாரியம்ம கோயில் மண்டபம் ஆகியவற்றில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

சாலைகளில் வடிகால் இன்றி குடியிருப்பு பகுதிகளில் தேங்கி வெள்ளக்காடாக காட்சியளிக்கும் மழை நீர்.

வீடுகளின்றி தவித்து வரும் மக்களுக்கு அவசரகால நிவாரணம் வழங்க வேண்டும், நீர்வழி பாதைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி போதிய வடிகால் வாய்க்கால்களை அமைத்தும், ஏற்கனவே உள்ள நீர்வழி பாதைகளை தூர்வாரியும் தர வேண்டும் என மக்கள் கோரிக்கை வைத்துள்ளர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com