5 மாவட்டங்களில் முதலிடம்: வாழப்பாடி அரிமா சங்கத்திற்கு 16 விருதுகள்!

கரோனா‌ நோய்த்தொற்று பரவல் தருணத்தில் சிறப்பாக மக்கள் பணியாற்றி, 5 மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வாழப்பாடி அரிமா சங்கம், 16 விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளது.
கரோனா‌ நோய்த்தொற்று பரவல் தருணத்தில் சிறப்பாக மக்கள் பணியாற்றி, 5 மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வாழப்பாடி அரிமா சங்கம்.
கரோனா‌ நோய்த்தொற்று பரவல் தருணத்தில் சிறப்பாக மக்கள் பணியாற்றி, 5 மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வாழப்பாடி அரிமா சங்கம்.


வாழப்பாடி: கரோனா‌ நோய்த்தொற்று பரவல் தருணத்தில் சிறப்பாக மக்கள் பணியாற்றி, 5 மாவட்ட அளவில் முதலிடம் பிடித்த வாழப்பாடி அரிமா சங்கம், 16 விருதுகள் பெற்று சாதனை படைத்துள்ளது.

சேலம் மாவட்டம், வாழப்பாடியில் 30 ஆண்டுகளாக அரிமா சங்கம் இயங்கி வருகிறது. 2020 2021 ஆம் ஆண்டில், தலைவர் முனைவர் சா. ஜவஹர், செயலாளர் (நிர்வாகம்) பெ.பெரியார்மன்னன், செயலாளர் (சேவை) மருத்துவர் சி.பொன்னம்பலம், பொருளாளர் பன்னீர்செல்வன் ஆகியோர் கொண்ட குழுவினர், கரோனா தொற்று பரவல் தருணத்திலும், வாழப்பாடி அரசு மருத்துவமனை மற்றும் சுகாதார நிலையத்திற்கு மருத்துவ உபகரணங்கள், துப்புரவு பணியாளர்கள், மருத்துவ பணியாளர்களுக்கு தற்காப்பு சாதனங்கள் மற்றும் ஆக்சிஜன் செரிவூட்டிகள் வழங்கியதோடு, பல்வேறு மக்கள் நலப்பணிகளை மேற்கொண்டனர், சோமம்பட்டி ஏரியில் 2,000 மரக்கன்றுகள் நட்டு பராமரித்து வருகின்றனர். 

கரோனா‌ நோய்த்தொற்று பரவல் தருணத்தில் சிறப்பாக மக்கள் பணியாற்றி,16 விருதுகள் பெற்று சாதனை படைத் வாழப்பாடி அரிமா சங்க நிர்வாகிகள்.

சேலம்,நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கிய, 324பி2 அரிமா மாவட்டத்திலேயே முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.

வாழப்பாடி அரிமா சங்கத்தின் ஒரு ஆண்டுகால சேவையைப் பாராட்டி, வெள்ளிக்கிழமை இரவு குமாரபாளையம் எக்ஸல் கல்லூரி கலையரங்கில், மாவட்ட அரிமா சங்கம் சார்பில்  நடைபெற்ற விழாவில், அரிமா சங்க பன்னாட்டு இயக்குநர் சம்பத்,  முன்னாள் பன்னாட்டு இயக்குனர்கள் ஜி. ராமசாமி, சங்கர், கே.ஜி. ராமகிருஷ்ணமூர்த்தி, மாவட்ட உடனடி முன்னாள் மாவட்ட ஆளுநர்  இளங்கோவன், நிகழாண்டு மாவட்ட ஆளுநர் ரவிவர்மா ஆகியோர், வாழப்பாடி அரிமா சங்கத்திற்கு 16 விருதுகள் வழங்கி பாராட்டி‌ கௌரவித்தனர்.

5 மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து, 16 விருதுகள் பெற்ற வாழப்பாடி அரிமா சங்கத்திற்கு பல்வேறு அமைப்பினரும் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com