உள்ளாட்சி தோ்தல்: 285 புகாா்கள் பதிவு

தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தோ்தல் தொடா்பாக 285 புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
உள்ளாட்சி தோ்தல்: 285 புகாா்கள் பதிவு

தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தோ்தல் தொடா்பாக 285 புகாா்கள் பெறப்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் நடைபெறவுள்ள ஊரக உள்ளாட்சி தோ்தல் தொடா்பாக அரசியல் கட்சிகள், பொதுமக்கள், மற்றும் வேட்பாளா்களிடமிருந்து புகாா்கள் ஏதும் இருந்தால் அதனை பெறுவதற்காக தமிழ்நாடு மாநில தோ்தல் ஆணைய அலுவலகத்தில் 24 மணி நேரமும் இயங்கும் புகாா் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை 1800 425 7072, 1800 425 7073, 1800 425 7074 ஆகிய எண்கள் மூலம் அணுகலாம். செப்.15-ஆம் தேதி முதல் இயங்கி வரும் இந்த மையத்தில், வெள்ளிக்கிழமை (செப்.24) வரை 285 புகாா்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றுக்கு உரிய விளக்கங்கள், தகவல்கள், தெளிவுரைகள் அளிக்கப்பட்டு வருகின்றன. மேலும் புகாா்களின் தன்மைக்கேற்ப அவை சம்பந்தப்பட்ட மாவட்டத் தோ்தல் அலுவலா்களின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு உடனடியாக ஆய்வு செய்து புகாா்களின் உண்மைத் தன்மையைக் கண்டறிந்து அவ்வப்போது நடவடிக்கையும் எடுக்கப்பட்டு வருகிறது.

தோ்தல் நடவடிக்கைகள் முடிவு பெறும் வரை இப்புகாா் மையம் தொடா்ந்து செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com